ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

நபி (ஸல்) அவர்களது ஸீறாவும் அதனைக் கற்பதற்கான அவசியமும்

நபி (ஸல்) அவர்களது ஸீறாவும் அதனைக் கற்பதற்கான அவசியமும்

,ருந்த போதிலும் நபியவர்களது பெரும்பாலான வாழ்வியல் அம்சங்கள் மனித இயல்புகளோடு ஒன்றிணைந்ததாகவே காணப்ப டுகின்றன.

உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்துக்கு இஸ்லாமிய அழைப்புப் பணியை எத்தி வைத்த போது பல்வேறு கஷ்டங்களையும் வேதனைகளையும் எதிர்கொண்டார்கள். அதுபோல இஸ்லாத்திற்காக பல யுத்தங்களில் பங்கெடுத்தார்கள். அதில் வெற்றி பெற்ற அதேவேளை, இன்னும் சில யுத்தங்களில் பின்னடைவையும் சந்தித்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களது வாழ்வு யாரும் ஆச்சரியமாக அல்லது சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அளவுக்கு அமையப்பெறவில்லை என்பதும் நபி (ஸல்) அவர்களது kறாவுக்கே உரித்தான சிறப்பம்சமாகும்.

உண்மையாகவே, நபி (ஸல்) அவர்களது kறா மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளைப் பற்றியும் பேசுகின்ற அனைத்து விடயங்களுக்கும் வழிகாட்டுகின்ற ஒரு மூலமாகக் காணப்படுகின்றது.

ஆனால், இன்று எம்மில் எத்தனை பேர் நபி (ஸல்) அவர்களது வாழ்வோடு இறுக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றோம் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஸஹாபாக்களின் வாழ்வு நபி (ஸல்) அவர்களை ஒருவன் எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை எமக்கு மிகவும் அழகாகக் கற்றுத் தருகின்றது. ஒருமுறை உஹத் போர் முடிவடைந்து திரும்புகின்ற வழியில் பனூதீனாரைச் சேர்ந்த ஒரு பெண் நபி (ஸல்) அவர்களின் நிலையை விசாரித்துக் கொண்டு ரிஸிகின்றாள்.

அப்போது அவளிடம் உனது கணவர், சகோதரர் போரில் கொல்லப்பட்டு விட்டனர் என்ற செய்தி சொல்லப்பட்டும் கூட அந்தப் பெண் அதனைப் பொருட்படுத்தாமல் நபியவர்களின் நிலையை அறிந்து கொள்வதிலேயே ஆவலாக இருந்தாள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை தனது கண்களால் கண்ட பின் அந்தப் பெண் கூறிய வார்த்தைகள் எந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களை ஸஹாபாக்கள் நேசித்திருக்கின்றார்கள் என்பதைப் படம் பிடித்துக்காட்டுகின்றது.

“நபியவர்களை நான் கண்டவுடன் இந்த உலகிலுள்ள துன்பங்கள் அனைத்துமே இலகுவானதாக மாறிவிட்டது” அதுபோல ஸஅத் இப்னு ரபீஆ (ரழி) அவர்கள் உஹத் போரில் மிகக் கடுமையாகக் காயப்பட்டு மரணத் தறுவாயில் இருந்த போது ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்களிடம் கூறிய இறுதி வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“நான் சுவனத்தின் நறுமணத்தை நுகர்கிறேன் என்பதை நபியவர்களிடம் சொல். இன்னும் உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்பதை எனது நண்பர்களாகிய அன்சாரிகளிடம் சொல்.”

இன்று முஸ்லிம் சமூகம் நபி (ஸல்) அவர்களின் போதனைகளையும், வழிகாட்டல்களையும் புறக்கணித்து விட்டு மேற்கத்தேய கலாசாரத்தின் சுவடுகளை பின்பற்றிக் கொண்டிருக்கின்ற மையானது கவலையோடும், வெட்கத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும். இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் இந்த உலகம் மீண்டும் ஜாஹிலிய்யாக் காலத்தை நோக்கி சென்று விடும் மோசமான சூழ்நிலையை யாராலும் தடுக்க முடியாது.

இதன் பின்னர் மனித சமூகத்துக்கு நேர்வழி காட்ட எந்தத் தூதரும் அல்லாஹுத்தஆலாவினால் அனுப்பப்படமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களது போதனைகளும் வழிகாட்டல்களுமே இறுதி நாள் வரை மனித சமூகத்திற்கான வழிகாட்டியாக நிலைத்திருக்கும். ஆகவே நபி (ஸல்) அவர்களது kறாவை எமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பின்பற்றி வாழ்ந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா அருள் புரிய வேண்டும்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி