ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனங்களுக்கு புதிய பாலம்

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனங்களுக்கு புதிய பாலம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப் பாக மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது கட்டுக்கடங்காத கூட்டம் காணப் படும். இந்த உற்சவ காலங்களில் சபரி மலைக்கு வரும் விஐபி க்கள் நெரிசல் காரணமாக எளிதில் தரிசனம் செய்ய முடி யாத நிலை உள்ளது. பக்தர்களோடு விஐபி க்களும் முண்டியடித்து செல்ல வேண்டி யிருப்பதால் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்படுகிறது.

இதை தவிர்ப்பதற்காக சபரிமலை வரும் விஜபிக்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக சன்னிதானத்தில் மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் அரசு ஓய்வு இல்லத்திலிருந்து நேரடியாக கோயிலுக்கு செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணத்துக்காக இந்த திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, கோயிலின் வடக்கு நடையி லிருந்து பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட் டுள்ளது. இந்த பாலத்தில் விஐபி க்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த பாலத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவ சம் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி