ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

தீயவர்க்கு இடம் தராதே!

தீயவர்க்கு இடம் தராதே!

பன்றி ஒன்று ஒரு வீட்டில் மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தது.

அங்கு வந்த பெண் ஓநாய் ஒன்று 'பன்றியே! என் மீது இரக்கம் காட்டு. நான் குட்டிகள் பெறும் நிலையில் உள்ளேன். இங்கே என்னைத் தங்க அனுமதித்தால் நன்றியுடன் நடந்து கொள்வேன்." என்றது.

ஓநாயின் நிலையைக் கண்டு இரக்கப்பட்ட பன்றி அதற்குத் தங்க இடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றது.

சில நாட்களில் ஓநாய் நான்கு குட்டிகளைப் போட்டது.

அங்கு வந்த பன்றி, 'ஓநாயே என் இடத்தைத் திருப்பித் தந்துவிடு. நான் தங்க இடம் இல்லாமல் துன்பப்படுகிறேன்" என்றது.

"பன்றியே என் குட்டிகள் மிகச் சிறியவையாக உள்ளன. இந்த நிலை யில் என்னை வெளியே போகச் சொன்னால் எப்படிப் போவேன்? இன்னும் சில நாட்கள் பொறுத்துக் கொள். குட்டிகள் பெரிதானவுடன் இங்கிருந்து சென்று விடுகிறேன்" என் றது ஓநாய்.

அதன்படியே சில நாட்கள் பொறுத்திருந்தது பன்றி. மீண்டும் ஓநாயிடம் வந்த அது, 'எப்பொழுது இடத்தைக் காலி செய்யப் போகிறாய்?" என்று கேட்டது.

"நான் எதற்காக இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்? நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம். நீ ஏதேனும் தகராறு செய்தால் உன்னைக் கிழித்துப் போடுவோம்" என்று கோபத்துடன் உறுமியது ஓநாய்.

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த பன்றி தன் தலைவிதியை நொந்தபடி அங்கிருந்து சென்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி