ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
திருமலையில் இருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

பாலியல் வல்லுறவு:

திருமலையில் இருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை

திருகோணமலை செல்வநாயகம்புர பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குப்படுத்திய இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் இவர்களுக்கு தலா 5 ஆயி ரம் ரூபா தண்டப் பணமும், தண்டப் பணம் கட்டத் தவறின் மேலதிகமாக 6 மாத சிறைத் தண்டனையும், இச்சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்கு மாறும் நஷ்ட ஈட்டை கட்டத்தவறும் பட்சத்தில் 1 வருட மேலதிக சிறைத் தண்டனை வழங்குமாறும் தீர்ப்பளிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 08 ஆம் திகதி திருகோணமலை செல்வநாயகம் புரப் பகுதியில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூவர் மீது தண்டனை கட்டளை சட்ட 364 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். தியாகேந் திரன் முதலாம், இரண்டாம் எதிரிகள் இருவருக்கு மேற்படி தீர்ப்பினை வழங்கினார்.

இவ்வழக்கின் மூன்றாவது எதிரியான செல்லத்துரை சாந்தலிங்கம் போதிய சாட்சிகளின்றி நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி