ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
க. பொ. த. (உ/த) மதிப்பீடு நிறைவு : விடுமுறைக்கு முன் பெறுபேறு

க. பொ. த. (உ/த) மதிப்பீடு நிறைவு : விடுமுறைக்கு முன் பெறுபேறு

பாடசாலை விடுமுறைக்கு முன் க. பொ. த. உயர்தரப் பரீடசை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக் களம் தெரிவித்தது. உயர்தரப் பரீட்சைத் தாள்களை திருத்தும் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ளதோடு, புதிய பாடத் திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் என்பவற்றின்படி முடிவுகள் வெளியிடப் படும் எனப் பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் தோற்றினர். உயர்தரப் பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை தவிர வேறு அடையாள அட்டைகள் பயன்படுத்திய வர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப் படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி