ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
116 – 120 புள்ளி பெற்றோருக்கு மீன்பிடித்துறையில் தொழில்

கொரிய மொழித் தேர்வு:

116 – 120 புள்ளி பெற்றோருக்கு மீன்பிடித்துறையில் தொழில்

கொரியாவில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள் வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 116 தொடக்கம் 120 வரையான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மீன்பிடித்துறையில் வேலை வாய்ப்பினை வழங்க தீர்மானிக் கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையில் தோற்றியவர்களுள் இரண்டாயிரம் பேர் 116 தொடக்கம் 120 வரை யான புள்ளிகளைப் பெற் றுள்ளனர்.

இவர்களிலும் மீன்பிடித்துறை யில் சிறந்த அனுபவம் பெற்ற வர்களுக்கு மாத்திரமே முன் னுரிமை வழங்கப்படும்.

மீன்பிடித்துறையில் அனுபவம் கொண்ட மேற்படி நபர்கள் தமது மாவட்டத்துக்குப் பொறுப்பான கடற்றொழில் பரிசோதகரிடமி ருந்து தமது அனுபவத்தை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றி னைப் பெற்று, சமர்ப்பித்தல் அவ சியம். இது தொடர்பான வேறு சான்றிதழ்கள் இருப்பின் அவற் றையும் சமர்ப்பிக்கலாம். எதிர் வரும் எட்டாம் திகதிக்கு முன் னர் இவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்குச் சென்று தமது பெயர், விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், தகைமையடிப்ப டையில் தெரிவு செய்யப்படுவோர் மேலதிக பயிற்சிகளுக்காக அழைக் கப்படுவரெனவும் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை எழுத்துப் பரீட்சையில் 172 இற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள பரீட்சார்த்திகளுக்கு கொரிய நாட்டின் மனிதவள திணைக்களம் முன்னுரிமையளிக்குமெனவும் அவர் கூறினார்.

எழுத்து மூலப் பரீட்சைக்காக 200 புள்ளிகளும் உடற் தகைமைகளுக் காக 100 புள்ளிகளுமாக மொத் தம் 300 புள்ளிகளில் ஆகக் குறைந் தது 240 புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டு மெனவும் பணியகத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி