ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 
பூமியதிர்ச்சிக்கு தாக்குப்பிடிக்கும் வீடுகள் இந்தியாவில் நிர்மாணம்

பூமியதிர்ச்சிக்கு தாக்குப்பிடிக்கும் வீடுகள் இந்தியாவில் நிர்மாணம்

குஜராத் மாநிலத்தில் 10,000 வீடுகள் கட்டிமுடிப்பு

இந்தியாவில் அடிக்கடி பூமியதிர்ச்சி ஏற்படும் குஜராத் மாநிலத்தில் பூமியதிர்ச்சியைத் தாக்குப் பிடிக்கும் வகையில் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள இந்திய விஞ்ஞான நிறுவனம் இதனை மேற்கொண்டு வருகி றது. இந்நிறு வனமானது கடந்த ஆறு மாத காலத்தில் 10,000 வீடுகளை நிர்மாணித்துள்ளதுடன் அலுமினியம், இலகு செங்கற்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தியே இந்த வீடுகளை நிர்மாணித்து வருகிறது. இத்தகைய வீடுகள் பூமியதிர்ச்சியினால் அழிவுறும் மனித உயிர்களையும் பொருட்சேதங்களையும் கட்டுப்படுத்துவதில் உறுதுணை புரிகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதேவேளை; இந்திய விஞ்ஞான நிறுவனமானது யானைகளினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கான திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

காட்டுயானைகளின் நடமாட்டத்தை செய்மதியின் உதவியுடன் இனங்கண்டு அதனால் எற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்கு இந்நிறுவனம் இத்திட்டத்தை செயற்படுத்துகிறது.

தூக்க மருந்துகளை யானைக்கு ஏற்றி அவற்றை 40 நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்கடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரள, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இரு தரப்பிலுமான மரணங்களும் தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த விசேட செய்மதியூடான திட்டத்தை மேற்படி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. (ஸ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி