ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160

யாழ். குடாநாட்டில் உறுதியான பாதுகாப்பு:

வன்முறைகள் அதிகரிப்பதாகக்காட்டி குடாநாட்டில் சிலர் தேர்தல் பிரசாரம்

யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் இலாபம் தேடும் வகையில் சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக சிலர் திரிபுபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.தேர்தல் காலங்களில் இது போன்ற செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட சில தீய சக்திகள் ஈடுபடுவது வழக்கம். எனவே இது அரசியல் இலாபத்தை கருதியே செய்யப்படுகின்றது என்றார்.

விவரம் »

நெல் மற்றும் காய்கறிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த உர மானிய முறையை படிப்படியாக அனைத்துப் பயிர் வகைகளுக்கும் ஏற்புடையதான வகையில் மறுசீரமைப்பேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதார வளர்ச்சியை எட்ட இந்தியாவின் பங்களிப்பு அவசியம்

* இந்தியா எம்மீது ஆதிக்கம் செலுத்தவில்லை
* கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது; ஒப்பந்தமல்ல
* அரசு - கூட்டமைப்பு இணக்கப்பாடு

இந்தியா எம்மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. எம்மை கட்டுப்படுத்தவுமில்லை. நாம் எதிர்பார்க்கின்ற பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியா எமக்கு உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது.

விவரம் »

கே.பி. தொடர்ந்தும் கைதியாகவே உள்ளார்

கே. பி. குறித்து தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு அவர் குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். குமரன் பத்மநாதன் வெளியில் சுதந்திரமாக இல்லை. அவர் கைதியாகவே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். வாய் மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எழுப் பியிருந்த கேள்விக்குப் பதி லளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:-

விவரம் »



மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பூதவுடலுக்கு நேற்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



137 பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று புதிய ஜீப் வண்டிகள் கையளிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனை வழங்கினார். படத்தில் வழங்கப்பட்ட ஜீப் வண்டிகளையும் பாதுகாப்பு செயலருடன் பொலிஸ் மாஅதிபர் இளங்ககோன் மேடையில் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
(படம் நிஸ்ஸங்க விஜேரட்ன)