ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,23, 2010
சானியா மிர்சாவுடன் ஒப்பிடுவதா? சாய்னா கோபம்
சானியா மிர்சாவுடன் ஒப்பிடுவதா?
சாய்னா கோபம்
இந்திய விளையாட்டுத்துறையில் சானியா மிர்சா (டென்னிஸ்), சாய்னா நேவால் (பேட்மிண்டன்)
இருவரும் மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறார்கள். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள்
பட்டாளம் உண்டு.
சானியா - சாய்னா இருவரையும் ஊடகங்களும், ஒரு சில முன்னாள்
பிரபலங்களும் ஒப்பிட்டு கூறுவது உண்டு.
ஆனால் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பதை உலக
தரவரிசையில் 2வது இடம் வகிக்கும் சாய்னாநேவால் விரும்பவில்லை.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு சாய்னா அளித்த பதிலில், ‘உலக தரவரிசையில் நாங்கள்
இருவரும் ஒரே மாதிரியாக 2வது இடத்தில் இருந்தால் ஒப்பிட்டு பேசுவதில் அர்த்தம் உண்டு.
ஆனால் இங்கு அப்படி இல்லை.
அதுமட்டுமன்றி சானியா இரட்டையரில் உண்மையிலேயே நன்றாக
ஆடியுள்ளார். ஆனால் ஒற்றையரில் குறிப்பிடும்படி இல்லை.
அதேபோல் கிராண்ட்ஸ்லாம்
பட்டத்திற்கு நிகரான சூப்பர் சீரிஸ் பட்டங்களை 4 முறை நான் வென்றிருக்கிறேன்.
ஆனால்
அவர் ஒரு கிராண்ட்ஸ்லாம் (ஒற்றையர்) கூட வென்றதில்லை. எனவே, ஒப்பிட்டு பார்ப்பது
என்ற கேள்விக்கே இடமில்லை’ என்றார். சானியா மிர்சா டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில்
141வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.