வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

வடக்கு, கிழக்கில் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஜப்பானின் உதவி

வடக்கு, கிழக்கில் சமாதானம் மற்றும்
அபிவிருத்திக்கான ஜப்பானின் உதவி

உலக சமாதானத்திற்கு செழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் பங்களிப்பு வழங்கும் நாடு என்ற வகையில் ஜப்பான் இலங்கையில் சமாதானம் மற்றும் மீள்கட்டமைப்பிற்கு தனது உதவியை வழங்குவதுடன் நடுத்தர மற்றும் நீண்ட கால அபிவிருத்தி நோக்கினைக் கொண்டுள்ளது.

ஆகவே ஜப்பான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டமைப்பிற்கும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கும் அதி உயர்ந்த முன்னுரிமையளித்து செயல்பட்டு வருகின்றது. ஜப்பான் சமாதான நடவடிக்கைகளுக்கு தனது முழு உதவியை வழங்குகின்றது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் நிலையான அபிவிருத்தி செளபாக் கியத்திற்கு இன்றியமையாததாகும்.

வடக்கு மற்றும் கிழக்கிற்கான ஜப்பானிய உதவியானது அவசர மனிதாபிமான உதவியிலிருந்து சமூக, பொருளாதார அபிவிருத்தி வரை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்  (JICA)  சர்வதேச அமைப் புகள் மற்றும் அரச சார்பற்ற நிறு வனங்களினூடாக வழங்கப்படுகின்றது.

மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளில் கவனம் செலுத்தல்

ஜப்பானிய அரசாங்கமானது ஆயுத மோதல்களின் முடிவில் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் உடனடி நிவாரணத்திற்கும் உதவி புரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. 20 மில்லியன் (22 மில்லியன்) அமெரிக்க டொலர் பெறுமதியான உணவு, தற்காலக் குடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களின் அவசரத் தேவைக்காக யிலிணி,  IOM, UNICEF, UNHCR  மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நிலக்கண்ணி வெடி அகற்றுவதற்கான உதவி

இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்கும் விவசாய வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கும் ஜப்பான் முக்கிய உதவி வழங்குனராக இருந்து வருகின்றது.

2003 ஆம் ஆண்டிலிருந்து வட கிழக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் US  21 மில்லியன் (அண்ணளவாக ரூ. 2350 மில்லியன்) வழங்கி பெரும்பாலான பிரதேசங்களை நிலக் கண்ணிவெடியற்ற பிரதேசங்களாக மாற்ற உதவி புரிந்தது.

2010 ஆம் ஆண்டில் ஜப்பான் 16 மில்லியன் (அண்ணளவாக ரூ. 180 மில்லியன்) ஐ மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்காக Swiss Foundation for Mine Action (FSD), HALO Trust ÁüÚõ Devlon Assistance for Social Harmony (DASH) மூலமாக வழங்கியது. இக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் ஊடாக இப்பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

அபிவிருத்தி உதவியும் இழப்பை ஈடுசெய்தலும்

1. அடிப்படை சமூக சேவைகளை வழங்குதல்

மோதலில் பாதிப்புற்ற மக்களின் அவசர தேவைகளுக்கு உதவி வழங்குவதிலும் மேலதிகமாக பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தி உதவி மற்றும் அடிப்படை சமூக சேவைகளை பூர்த்தி செய்வதிலும், ஜப்பான் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. ஜப்பான் யுத்த நிறுத்த காலப் பகுதியில் மக்களுக்கு மிகவும் தேவையான சுகாதார வசதிகளை வழங்கும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கட்டுமானத்திற்கு உதவி வழங்கியதுடன் தற்போது வடக்கு மக்களின் அதிகரித்த சுகாதார தேவைகளுக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் உதவி வருகிறது.

மற்றும் வடக்கு மக்களுக்கு திருப்திகரமான மின்சார வசதியை வழங்கும் பொருட்டு கிளிநொச்சி வவுனியா மின்சார இணைப்புக்கு உதவியளித்து வருகின்றது. கிழக்கில் கிழக்கு மாகாண நீர் வழங்கல் அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனூடாக நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான நீரை வழங்க இயலுவதுடன் பல்வேறு கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும்.

2. இணைப்பை அதிகரித்தல்

நகர்ப்புறங்களுடன் இணைப்பை அதிகரிப்பானது கிராமப்புற அபிவிருத்திக்கு (விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட) இன்றியமையாததாகும். அதே நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்குடன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இணைப்பானது அபிவிருத்திக்கு மட்டுமன்றி இனங்களுக்கிடையே சமாதானமும் நட்பும் ஏற்படுத்த உதவும்.

இந்நோக்கை அடைவதற்காக ஜப்பான் வடக்கு கிழக்கில் வீதிகளை மற்றும் பாலங்களை நிர்மாணிப்பதன் மூலம் இப் பிரதேசங்களின் சமூக பொருளாதார விருத்திக்கு உதவியளிக்கின்றது. புதிய மன்னார் பாலம் வடக்கு மற்றும் கிழக்கு ஏனைய பகுதிகளோடு இணைப்பதற்கான சிறந்த இணைப்பாகும்.

இதற்கு மேலதிகமாக பல்வேறு திட்டங்களின் கீழ் கிழக்கு மாகாண வீதிகள் மற்றும் கிராமப்புற வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. ஜப்பானிய அரசாங்கமானது கிழக்கு மாகாணத்தில் 5 பாலங்களை நிர்மாணிக்க உதவியளித்து வருகின்றது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயர்வடைவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும்.

3. சுயசார்பு நிலையை விருத்தி செய்தல்

மோதலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வாழ்வாதாரத்தை மீள்கட்டியெழுப்பலை நோக்காகக் கொண்டு ஜப்பான் பல்வேறு சுயசார்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவியளித்து வருகின்றது.

வறுமை ஒழிப்பு சிறு கடன் திட்டம் மக்கள் தொடர்புடன் விவசாய கிராமிய அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமான (TRINCAP)  திட்டம் வறிய மக்கள் பொருளாதார அபிவிருத்தி போன்ற திட்டங்களை வாழ்வாதார அபிவிருத்தியை ஏற்படுத்தவும் சமூகங்களின் விருத்தி நோக்காகக் கொண்டும் செயற்படுத்தப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக ஜப்பான் அடிமட்ட மற்றும் மனித பாதுகாப்பு திட்டங்களின் ஊடாக பல்வேறு செயல்திட்டங்களை மக்களின் பங்களிப்புடன் செயற்படுத்தி வருகின்றது. அண்மையில் ஜப்பான் தனது GGP  செயல்திட்டங்களை மோதலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மீள்கட்டியெழுப்பவும் கீழ் கட்டமைப்பு வசதிகளின் மீள்கட்டுமானத்திற்கும் சர்வோதய, சேவா லங்கா மற்றும் இலங்கை சமூக நடவடிக்கைகள் சங்கத்தினூடாகவும் செயற்படுத்தி வருகின்றது.

GGP  செயல்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கில் 30ற்கு மேற்பட்ட சமூக நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் ஜப்பானிய அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக பல்வேறு வாழ்வாதார நலத் திட்டங்களுக்கு உதவியளித்து வருகின்றது.

தற்போது (Save The Children Japan  சிறுவர் பராய அபிவிருத்தி திட்டமொன்றை திருகோணமலையிலும் JEN  நிறுவனம் விவசாயிகளுக்கு உதவும் திட்டமொன்றை மட்டக்களப்பிலும் செயற்படுத்தி வருகின்றது. இதற்கு மேலதிகமாக ஜப்பான் பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிறுவனங்களினூடாக உதவியிருக்கின்றது.

4. மனிதவள மேம்பாட்டை விருத்தி செய்தல்

மனிதவள அபிவிருத்தியை நோக்காகக் கொண்டும் உள்ளூர் நிர்வாக நிறுவனங்களின் இயலளவை அதிகரிக்கும் பொருட்டும் 3000 வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு தற்போது பயிற்சி வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ஜப்பான் மனிதவள புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக வடகிழக்கைச் சேர்ந்த பல்வேறு அரச உத்தியோகத்தர்கள் ஜப்பானில் தற்போது உயர்கல்வி கற்கின்றனர்.

உத்தேச இளந் தலைவர்கள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வடகிழக்கைச் சேர்ந்த 26 இளைஞர்கள் 18 நாள் பயிற்சி நெறியொன்றை மோதலுக்கு பிந்திய மீள்கட்டமைப்பு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புக என்ற தொனிப் பொருளின் கீழ் பெறுவார்கள்.

மேற்கூறிய எல்லா நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், மக்களின் சகவாழ்வுக்கான ஜப்பானின் அதி உச்ச அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வுதவிகளினுடாக மக்கள் நேரடியாக பயன்பெற்று, தங்களது வாழ் வாதாரங்களை விருத்தி செய்து நீடித்த சமாதானத்தை நல்லிணக்க முயற்சிகளின் முலம் பெற்று தன்னிறைவான சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைவார்கள் என ஜப்பான் எதிர்பார்க்கின்றது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »