வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

இலங்கை உதைபந்தாட்ட வீரர் செயினுலாப்தீன் ஞாபக நிகழ்ச்சி

இலங்கை உதைபந்தாட்ட வீரர்
செயினுலாப்தீன் ஞாபக நிகழ்ச்சி

காலஞ்சென்ற இலங்கையின் தேசிய உதைபந்தாட்ட அணியின் வீரர் ஏ. செயினுலாப்தீன் நினைவு நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை நகர உதைபந்தாட்ட லீக் மைதானத்தில் இடம் பெற்றன. கொம்பனித் தெரு உதைபந்தாட்டக் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிகளில் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் அடங்கிய கழகங்களுக்கிடையிலான சுற்றுப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது.

இதனையடுத்து விக்டரி, பிளக்ஸ்குயர் கழக முன்னாள் வீரர்களுக்கிடையிலான கண்காட்சி உதைபந்தாட்டப் போட்டி ஒன்றும் இடம்பெற்றது. இதில் முன்னாள் தேசிய உதைபந்தாட்ட வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். தேசிய அணியின் பயிற்சியாளராக, நகர உதைபந்தாட்ட லீக் தலைவராக செயற்பட்டவராவார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »