வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தாவினை பிடிக்க அமெரிக்கா முயற்சி

பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும்
அல்கொய்தாவினை பிடிக்க அமெரிக்கா முயற்சி

பாகிஸ்தானின் எல்லையோர பகுதியில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலிபான், ஹக்கானி கும்பலை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் எதுவும் செய் யாத நிலையில், அங்கு புகுந்து இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி அளி க்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டு இருக்கும் அமெரிக்க இராணுவ தளபதிகள் கேட்டுக்கொண் டுள்ளனர்.

அமெரிக்க இராணுவ அதிகாரிக ளின் இந்த திட்டத்துக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி அளிக்க வில்லை. இருந்தபோதிலும் இரா ணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று அனுமதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் கள்.

அமெரிக்க அரசு இதற்கு அனுமதி கொடுத்தால் தலைமறைவாக இருக் கும் அல்கொய்தா, தலிபான் தலை வர்களை பிடித்து விடமுடியும் என் றும் அவர்கள் தெரிவித்து இருக்கி றார்கள்.

இப்போதைக்கு பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு ஏவுகணை தாக்குதல்களையே அமெரிக்கா நம்பி இருக்கிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»