வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷர்ரஃப் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கெதிராக வழக்கு

பஜுலுஸ்தான் மாகாண முதலமைச்சர் கொலை விவகாரம்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷர்ரஃப் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கெதிராக வழக்கு

பஜுலுஸ்தான் மாகாண முதலமைச்சர் நவாப் அக்பர் பகூதி கொலை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி முஷர்ரஃப் உட்பட இன்னும் பல முக்கியதர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஷர்ரஃபின் ஆட்சிக் காலத்தில் நவாப் அக்பர் பகூதி உட்பட 38 பேர் கொலை செய்யப்பட்டனர். பஜுலுஸ்தான் மாகாணத்துக்கு விசேட அதிகாரம் வேண்டி முன்னெடுக்கப்பட போராட்டத்தில் நவாப் அக்பர் தலைமையேற்றார். இதை அடக்கும் பொருட்டு முஷர்ரஃபால் விசேட இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சமரில் பஜுலுஸ்தான் முதலமைச்சர் உட்பட 38 பேர் 2006ல் பலியாகினர். இது தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதால் முஷர்ரஃப் உட்பட அப்போதைய ஆட்சியாளர் சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி முஷர்ரஃப் முன்னாள் பிரதமர் ஷெளகத் அஸிஸ் முன்னாள் பஜுலுஸ்தான் முதலமைச்சர் ஜாம்பூசுப், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006ல் படுகொலை செய்யப்பட்ட பஜுலுஸ்தான் மாகாண முதலமைச்சர் நவாப் அக்பரின் மகன் இவர்களுக்கெதிராக குற்றப்பத் திரிகையைத் தாக்கல் செய்தார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •