வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட ஐ.நா. அதிகாரி இந்தோனேஷியா பயணம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட ஐ.நா. அதிகாரி இந்தோனேஷியா பயணம்

சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஜோன் ஹோல்ம்ஸ் நேற்று இந்தோனேஷியா சென்றார். தலைநகர் ஜகர்த்தாவிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் படாங் சென்ற ஜோன் ஹோல்ம்ஸ் சேதமுற்ற பிரதேசங்களை பார்வையிட்டார்.

நிவாரண, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையிலீடுபட்ட ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் அந்நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

இவ்வாறான இயற்கை அழிவுகளின்போது சர்வதேச நாடுகளால் எவ்வாறான உதவிகளை வழங்க முடியுமென்பது குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். ஜப்பான் வெளிநாட்டமைச்சரும் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பொருட்டு ஜப்பான் பல குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவ உதவியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் இக்குழுவிலுள்ளனர். பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச கட்டடங்கள் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இங்கு முடிவெடுக்கப்பட்டது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •