வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

இஸ்ரேலுக்கெதிரான போர்க்குற்ற அறிக்கை நாளை ஐ.நாவில் சமர்ப்பிப்பு

இஸ்ரேலுக்கெதிரான போர்க்குற்ற அறிக்கை நாளை ஐ.நாவில் சமர்ப்பிப்பு

இதுவரை 18 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க உறுதியளித்துள்ளதாக தகவல்

இஸ்ரேலின் போர்க்குற்ற அறிக்கை சம்பந்தமாக நாளை வெள்ளிக்கிழமை ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். இஸ்ரேலுக்கெதிராக தயாரிக்கப்பட்டுள்ள கோல்ட்ஸ்ரோன் என்ற அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை ஐ.நா.வில் வாக்கெடுப்பிற்கு வரவுள்ள நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரிகள் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

கோல்ட்ஸ்ரோன் என்ற இந்தப் போர்க்குற்ற அறிக்கை தென்னாபிரிக்காவின் பிரபல வழக்கறிஞர் ஜரிஸ்ட்ரிக்கார்ட் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இஸ்ரேல் இராணுவத்தை பிரதான குற்றவாளியாகவும் ஹமாஸை சிறுகுற்றவாளியாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இக்குற்றப் பத்திரிகையை மார்ச் மாதம் சமர்ப்பிக்கும்படி பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகளைப் பாதிக்கும் எனப் பயந்து அப்பாஸ் இந்த அறிக்கையைப் பிற்போடும்படி கோரியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நியாயம் கூறின. ஐ.நா.வின் மனித உரிமைச் சபையிலுள்ள 49 நாடுகளில் இதுவரைக்கும் 18 நாடுகள் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களிக்க உறுதியளித்துள்ளதாக பி. எல். ஓ. வின் சிரேஷ்ட அதிகாரி மொஹமட் டெலான் கூறியுள்ளார்.

அரபு நாடுகள் லிபியா என்பவற்றின் கடுமையான அழுத்தத்தாலே பிற்போடப்படவிருந்த அறிக்கைக்கான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மத்திய கிழக்கிற்கான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் பாழடைவதைத் தடுக்கும் பொருட்டே இந்த அறிக்கையைப் பிற்போடுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக அமெரிக்கா தரப்பிலும் கூறப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் இஸ்ரேலுக்கெதிரான போர்குற்ற அறிக்கை வாக்கெடுப்பு குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.

காஸாமீது கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் வான்தாக்குதல்களில் பெருமளவான பலஸ்தீனப் பொது மக்கள் பலியாகினர்.

1400 சிறுவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •