வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்தியகிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்

அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்தியகிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்

மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்வு பெரும் பேராபத்தானதென ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலிலர்ஜானி தெரிவித்தார். ஹமாஸை ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் இஸ்ரேலுடன் இணங்கிச் செல்லுமாறும் கூறும் அமெரிக்கா இஸ்ரேலின் அநீதிகளைக் கண்டிக்கவில்லையென அலிலர்ஜானி குற்றம்சாட்டினார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய சபாநாயகர் அலிலர்ஜானி, மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைக்கும் யூதக்குடியேற்றங்களை ஏற்க முடியாதெனக் கூறும் அமெரிக்கா அதை நிறுத்த எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

1967 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அரசாக ஏற்கும் படி வற்புறுத்துகின்றார். இந்நிலையில் பராக் ஒபாமாவின் யோசனைகள் பேராபத்தை ஏற்படுத்துமெனக் கூறினார்.

பலஸ்தீனர்களின் நியாயத்திற்காக ஈரான் மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை விஸ்தரிப்பதாகவும் பலஸ்தீனர்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு அமெரிக்கா மறைமுகமாகச் செயற்படுவதைத் தட்டிக்கேட்கவும் ஈரான் இப்பிரச்சினையில் அக்கறையுடன்னுள்ளதென்றும் அலிலர்ஜானி கூறினார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •