புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

சப்பாத்தி நூடில்ஸ்

சப்பாத்தி நூடில்ஸ்

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 6

உருளைக்கிழங்கு - 1

குடைமிளகாய் - 1

வெங்காயம் - 2

தக்காளி - 2

கேரட் - 1

இஞ்சி - சிறியதுண்டு

பு+ண்டு - 4 பல் பச்சைமிளகாய் -1

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பு+ன்

கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, சோம்பு,

சீரகம் - சிறிதளவு

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பு+ண்டு, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நீள வாக்கில் மெல்லியதாய் நறுக்கிக்கொள் ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும், பிறகு ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும், பிறகு மிளகாய்த்தூள், உப்புச்சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும், மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கருவேப் பிலை. கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும், ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும், சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.