புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஒவ்வொரு பெண்ணும் தாங் கள் விரும்பும் ஆண்கள் பல விடயங்களை தமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின் றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் ஆண்களின் செயற்பா டுகள் அமையும்போது பெண் களின் மகிழ்விற்கு அளவேயி ருப்பதில்லை. ஆனால் எதிர் பார்ப்புக்கு முரணான விடய ங்கள் நடைபெறும்போதுதான் குடும்ப வாழ்வில் பு+கம்பங்கள் எழுகின்றன.

பெண்கள் எதிர்பார்க்கும் விட யங்கள் அனைத்தையும் அவர் கள் சார்ந்த ஆண்களால் செய்ய முடியாதபோதிலும் செய்யக்கூடிய விடயங்க ளையாவது நிறைவேற்றினால் அது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு வேர் விடுகின்றது என்பதை ஒவ்வொரு ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, ஆண்களிடமிருந்து பெண்கள் பொதுவாக எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன?

* பெண்கள் ஏதேனும் ஒரு விடயம் குறித்து ஆண்களிடம் மனம் விட்டு பேசும்போது அதை ஆண்கள் மிக கவனமாக கேட்டுக் கொண்டிருப்பதை விரும்புகின்றார்கள். இவ்வாறு கேட்டுக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல நடந்துகொண்டால் அவளது மன உணர்வை ஆண்கள் புரிந்து கொண்டதாக பெண்கள் நினைக்கின்றார்கள்.

* பெண்களின் கோப, எதிர்மறையான எல்லா உணர்வுகளும் அவர்களின் மாதவி டாய் காலத்துடன் தொடர்பானவை அல்ல என்பதை புரிந்துகொள்பவர்களாக ஆண்கள் இருக்க வேண்டும்.

* ஆண்கள் இரக்க உணர்ச்சியை முன்னேற்றிக்கொண்டால் நல்லது. ஆனால் அதற்காக கண்ணீர்விட்டு அழ வேண்டும் என்பதில்லை. தனது துணையுடன் மேலும் உணர்வுபு+ர்வமாக நடந்துகொள்ள வேண்டும்.

* பெண்களைப் பொறுத்தவரை தொடர்பாடாலானது முக்கியமானது. அதனால் அடிக்கடி பெண்களிடம் பேச வேண்டும்.

* தனது கணவர் ஒரு மாதத்திற்கு ஒருதடவையேனும் தமக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என பெண்கள் விரும்புவர். இது பொதுவாக வழக்கத்துக்கு மாறானதுதான். ஆனால், இவ்வாறான ஆச்சர்யமூட்டும் விடயங்களினால் ஆண்களிடம் பெண்கள் அதிகம் விருப்பத்துக்குரியவர்களாக மாறுகின்றார்கள். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகள் பெண்களை மகிழ்ச்சியடைய செய்கின்றன.

* ஆண்களே, உங்கள் துணிச்சல் நீங்கள் வாகனம் செலுத்தும் வேகத்தில்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தாறுமாறாக ஒழுங்கீனமாக வாகனம் செலுத்தும் போது பெண்களை அதிகமாக தாக்குகிறது. அதனால் மெதுவாக வாகனத்தை செலுத்துங்கள்.

* பெண்களுக்கு பாதுகாப்பாக இருங்கள். ஆனால் அவர்களை சொந்த உடமைகளாக கருதாதீர்கள்.

* தமது ஆண் எப்போதும் தங்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதை பெண்கள் விரும்புகின்றார்கள். ஆண்களை விட்டு பெண்கள் நீங்கும் தருணங்களில் அந்த அன்பை வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

* ஆண்கள் விரும்பும் பெண்களை மிக வேகமாக இழப்பதற்கு ஒரு வழி பொய் சொல்வது. ஆண்கள் மிக நேர்மையாக இருப்பதையே பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.

* வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ஆண்களிடமிருந்து பெண்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள்.

* விடுமுறை நாட்களில் கணவர் வீடுகளில் இருக்கும்போது வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்வதை பெண்கள் அதிகமாக விரும்புகின்றார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.