புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
நியாயமான தீர்வே எமக்கு தேவை

தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது

நியாயமான தீர்வே எமக்கு தேவை

தேவையான விடயங்களுக்கு எமது ஆதரவை வழங்கி வெற்றி காண்போம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமானதும், நீதியானதுமான ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க் கின்றோம். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தடவையும் எமது மக்களின் அபிலாஷைகளை சர்வதேசமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஏமாற்ற நாம் ஒருபோதும் இட மளிக்கமாட்டோம். அதற்குத் தேவையானதும், வலுவானதுமான சகல விதமான நடவடிக் கைகளையும் நாம் எடுத்துள்ளோம்.

அதேவேளை தேவையான விடயங்களுக்கு விட்டுக் கொடுத்தும், எமது ஆதரவை வழங்கியும் வெற்றி காண்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னர் பல தடவைகள் இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் எம்மை ஏமாற்றி வந்த மிகச் சிறந்த அனுபவங்களை நாம் கொண்டிருக்கிறோம். அதனால் இத்தடவை நாங்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். அத்துடன் இந்தத் தடவை இலங்கை அரசாங்கத்தின் மீதும், சர்வ தேசத்தின் மீதும் நாம் நம்பிக்கை வைத்துச் செயற் படுகின்றோம். காரணம் இது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல.

அதனால் இந்தத் தடவை எமக்கு ஒரு நியாயம் கிடைக்கும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கின்றோம். இதேவேளை எமது செயற்பாடுகளைக் குழப்புவதிலும், எமக்குள் பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்துவதில் சிலர் குறியாக இருந்து வருகின்றனர். அவர்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கிறது. ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் எம்முடன் இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை நாம் (தொடர் பக். 04)

ஒருபோதும் வீணடிக்கமாட்டோம். இறுதிக்கட்டப் போரிலும் சரி அதற்கு முன்னரான யுத்த காலத்திலும் சரி பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் நியாயமான தீர்வை நாம் பெற்றே தீருவோம். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று முன்தினம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்கா முன் வைத்த யோசனைக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்தினை நாம் வரவேற்கிறோம்.

அதேபோன்று இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கையாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியின் கருத்தையும் நாம் வரவேற்கிறோம். உண்மை, நீதி மற்றும் பரிகாரத்திற்கான முக்கியத் துவத்தின் பகிரப்பட்ட அங்கீகாரத்தின் மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்யும், நல்லிணக்கத்தை முன்னிறுத்தல் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த சமாதானம் மற்றும் அபிவிருத்தியை உறுதி செய்வதில் மீள நிகழாதி ருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்கும் பிரேரணையாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.