புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூடம் - ஏவியன் டெக்னொலஜPஸ் இணைந்து அதி நவீன கெஸ்பர்ஸ்கி பிரதி அறிமுகம்

கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூடம் - ஏவியன் டெக்னொலஜPஸ் இணைந்து அதி நவீன கெஸ்பர்ஸ்கி பிரதி அறிமுகம்

தனிப்பட்ட கணனிக்கு நம்பத்தகுந்த பாதுகாப்பு

தனியார் வீட்டுக் கணினி பாவனையாளர்க ளுக்கு நிம்மதியாக தமது கணினிகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூடம் மற்றும் ஏவியன் டெக்னொலஜPஸ் என்பன இணைந்து அறிமுகம் செய்துள்ள அதி நவீன பாதுகாப்பு மென்பொருள் பொறிமுறையே இதற்குக் காரணமாகும். பாவனையாளர்கள் தமது தனிப்பட்ட விடயங்கள், தரவுகள், அடை யாளம், பணம் மற்றும் கருவி என பல்வேறு விடயங்களை இதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம். கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூடத்தின் புதிய வெளியீடான கெஸ்பர்ஸ்கி இணையப் பாதுகாப்பு முறை தற்போது இலங்கையில் கிடைக்கின்றது.

இந்தப் புதிய தீர்வு தரவேற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பம் கொண்டது. இணையத்தில் பாவனையாளர்கள் என்ன செய்தாலும் சரி, இந்தத் தீர்வு அவர்களது கருவியைப் பாது காக்கும். பாவனையாளர்களின் தனிப்பட்ட வாழ்வைப் பாதுகாக்கும் வகையில் பல புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. கெஸ் பர்ஸ்கி இணையப் பாதுகாப்பு, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் இணையச் செயற் பாட்டைக் கண்காணிக்கவும் வழியமைக்கின்றது. இதற்கான பிரத்தியேக பெற்றோர் கட்டுப்பாட்டு முறை இதில் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னைய பிரதிகளின் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள் இலவசமாக புதிய பிரதியை பதிவேற்றம் செய்து கொள்ள லாம். ஆனால், பிரயோகத்தை அவர்கள் மீள இணைத்துக் கொள்ள வேண்டும்.

இணைய வழிகள் மூலமான சைபர் அச்சுறுத் தல்கள் உலகளாவிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளன. அந்த அச்சுறுத்தல்களின் எண் ணிக்கை மற்றும் நவீனத்துவம் என்பனவும் கணிச மாக அதிகரித்து வருகின்றன. கெஸ்பர்ஸ்கி தற்போது ஒரு நாளைக்கு சுமார் 325,000 தீங்கி ழைக்கும் நவீன கோவைகளைக் கண்டு பிடித்து வருகின்றது. கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 6இ167இ233இ068 அச்சுறுத்தல்கள் கண்டு பிடிக்க ப்பட்டு, அவை சமநிலைப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் தினசரி அதிகரித்து வருகின்றது. துஷ்டர்கள் எவ்வாறேனும் தினசரி சில புதிய தீங்குகளை ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர்.

தங்களது தனித்துவ விடயங்களைப் பாது காப்பது என்பது எல்லோருக்கும் இருக்கின்ற உரிமையாகும். அது நிஜ வாழ்வாக இருந் தாலும் சரி, கற்பனை உலகமாக இருந்தாலும் சரி. கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூட தெற்காசியப் பிராந்தியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்தாப் ஹால்டே இது பற்றிக் குறிப்பிடுகை யில், கெஸ்பர்ஸ்கி ஆய்வு கூடத்தில் சைபர் குற்றவாளிகள் மற்றும் ஆர்வமுள்ள இணையப் பாவனையாளர்களிடமிருந்து, பாவனையாளர்க ளின் தனித்துவக் கோவைகள் மற்றும் பிரத் தியே விடயங்களைப் பாதுகாக்க சகல முயற்சி களும் மேற்கொள்ளப்படுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.