புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது

நியாயமான தீர்வே எமக்கு தேவை

தேவையான விடயங்களுக்கு எமது ஆதரவை வழங்கி வெற்றி காண்போம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நிரந்தரமானதும், நீதியானதுமான ஒரு தீர்வையே நாம் எதிர்பார்க் கின்றோம். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தடவையும் எமது மக்களின் அபிலாஷைகளை சர்வதேசமோ அல்லது இலங்கை அரசாங்கமோ ஏமாற்ற நாம் ஒருபோதும் இட மளிக்கமாட்டோம். அதற்குத் தேவையானதும், வலுவானதுமான சகல விதமான நடவடிக் கைகளையும் நாம் எடுத்துள்ளோம்.  அதேவேளை தேவையான விடயங்களுக்கு விட்டுக் கொடுத்தும், எமது ஆதரவை வழங்கியும் வெற்றி காண்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  முன்னர் பல தடவைகள் இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் எம்மை ஏமாற்றி வந்த மிகச் சிறந்த அனுபவங்களை நாம் கொண்டிருக்கிறோம். அதனால் இத்தடவை நாங்கள் ஒவ்வொரு சிறு விடயத்திலும் மிகவும் விழிப்பாக இருக்கிறோம். அத்துடன் இந்தத் தடவை இலங்கை அரசாங்கத்தின் மீதும், சர்வ தேசத்தின் மீதும் நாம் நம்பிக்கை வைத்துச் செயற் படுகின்றோம். காரணம் இது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல.

விவரம்


அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித் துரையாடினார். இரு தலைவர்களும் இலங்கை- இந்திய நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்துப் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (படம்- சுதத் சில்வா)

 

கழுகுக் கூட்டங்களின் சதித் திட்டங்களுக்கு இனியும் தீனி போடும் வகையில் TNA செயற்படக்கூடாது

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டு வரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங் களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற் படக்கூடாது. பழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

விவரம்»

ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அதன் பிரதான சந்தேக நபரான சரண் எனப்படுபவரை கைது செய்வதற்காக சுவிட்சர்லாந்து அரசாங்கத்தில் உதவி பெற்றுக்கொள்ள தீர்மானித் துள்ளனர்.

விவரம்»

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.