புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

குழந்தைகளுக்கு காது குத்தும்போது கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு காது குத்தும்போது கவனிக்க வேண்டியவை

நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தை களுக்கு காது குத்தும்போது ஒரு சில விசய ங்களை நாம் பேணவேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக் கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனெ ன்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.

* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.

* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதங்களுக்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.

* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன்படுத்தி கழுவவும்.

* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும்போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.

* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜp ஏற்படுமானால் அந்த அலர்ஜp, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

* குழந்தைகளின் காதணிகளை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொள்ளா தீர்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.