ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் PROTAMIN ஊசிக்கு தட்டுப்பாடில்லை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் PROTAMIN ஊசிக்கு தட்டுப்பாடில்லை

இருதய சத்திர சிகிச்சைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை

எப். எம். பைரூஸ்

கொழும்பு தேசிய ஆஸ்பத் திரியில் இருதய சத்திர சிகிச்சைகளை நிறுத்துவதற் கான தேவை இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

PROTAMIN என்ற ஊசிமருந்து பற்றாக்குறையினால் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக தெரிவித்துள்ள அமைச்சு மேற்படி தகவலை கூறியுள்ளது.

மேலும் இந்த செய்தி விடயமாக உடனடியாக ஆராயுமாறு அமைச்சர் மைத்திரிபால சிரிசேன வைத்திய விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கமல் ஜயசிங்ஹவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஊசி மருந்து போதியளவு கையிருப்பில் உள்ளது. பெரியாஸ்பத்திரியில் இருதய சத்திர சிகிச்சைகளை நிறுத்த எந்தத் தேவையும் இல்லை என டொக்டர் கமல் ஜெயசிங்க அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

இந்த ஊசிமருந்து இருதய நோயாளர்களைப் பொறுத்தவரை இருந்துவிட்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இம்மருந்து போதியளவு கையிலிருப்பில் உள்ளது. இருதய சத்திர சிகிச்சைகளை நிறுத்த அவசியம் இல்லை. கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு இம்மருந்து வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் இத்தகைய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவினால் அது பற்றி வைத்திய விநியோகப் பிரிவுக்கு முன்கூட்டி அறிவிக்காமை தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன பதில் சுகாதார செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி