ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136

13ஆவது திருத்தம்

நாட்டின் நிர்வாக முறையில் ஏற்பட்ட மாற்றம் மக்களின் விருப்புடன் மேற்கொள்ளப்பட்டதல்ல

* வடமராட்சி இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் கோரினார்

* 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதா? அல்லது நாட்டை ஆக்கிரமிப்பதா? என்ற தொனியில் இந்திய அழுத்தம் அமைந்திருந்தது

ஜனாதிபதியின் செயலாளர்

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறையில் ஏற்படுத்தப்பட்ட முழுமையான மாற்றம் நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்டதல்ல என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய லலித் வீரதுங்க, நாட்டு மக்களின் விருப்பமோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ இன்றியே அரசியல மைப்பின் 13 வது திருத்தத்தின் மூலம் நாட்டின் நிர்வாக முறைமை முழுமையாக மாற்றப்பட்டது எனவும் தெரிவித்தார்.

விவரம்

நாட்டில் உள்ள சகல சிறுவர்களினதும் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் முழுமையாக
உறுதிப்படுத்துவதற்கென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்த சிறுவர்களுக்கான
பொலிஸ் பணியகத்தை நிறுவுவேன். சிறுவர் மீதான குற்றங்களுக்கு எதிராக செயல்படும் பொருட்டு
இந்த அதிகாரசபைக்கு தேவையான அதிகாரத்தையும் சுயாதீனத்தையும் பெற்றுக் கொடுப்பேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

கடுங்காற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

17 சடலங்கள் நேற்று கரை ஒதுங்கின

சீரற்ற காலநிலை காரணமாக திடீரென வீசிய கடும் காற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவற்றில் 41 மீனவர்களும் மேலும் இருவரும் அடங்குவர்.இதேவேளை கடலில் காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளன.

விவரம்

மோசமான காலநிலை:

மரணங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்

தொடரும் மழை மற்றும் மோசமான கால நிலை காரணமாக சம்பவித்துள்ள மர ணங்கள் மற்றும் காயமுற்றவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு வொன்றை உடனடியாக நியமிக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவரது செயலாளர் லலித் வீரதுங்கவைப் பணித்துள்ளார்.மீனவர்களின் மரணத்திற்கான காரணம் மற்றும் மோசமான காலநிலை தொடர்பில் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதா என்பவை குறித்து ஆராயும் பொறுப்பு மேற்படி குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

விவரம்


 

ஏறாவூரில் நேற்றுக்காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறுமாத கைக்குழ ந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந் தனர். காயமடைந்த கைக்குழந்தை சிகிச் சைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதையும் விபத்துக்குள் ளான வாகனங்களையும் படத்தில் காண லாம்.
(படம்: எம். ஐ. எம். நாசர்)



 

காணிச் சீர்திருத்த ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த 'தன்பிம' காணி உறுதிப் பத்திரம் வழங்கும் வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இவ்வைபவத்தின் போது ஜனாதிபதி அவர்கள் பெண்ணொருவருக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்குகிறார். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.