ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

பணத்திற்காக வாத்து முட்டை வியாபாரியை கொன்று எரித்த கொடூரம்

பணத்திற்காக வாத்து முட்டை வியாபாரியை கொன்று எரித்த கொடூரம்

சென்னையில் சம்பவம்

சென்னையில் வாத்து வியாபாரியை 12 துண்டுகளாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி ஆந்திராவில் எரித்த கள்ளக்காதலிக்கு பொலிஸ் வலை வீசி தேடி வருகின்றனர். அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: சென்னை வில்லிவாக்கம் சாலோம் தெருவில் வசித்து வந்தவர் காளிமுத்து (42). வாத்து முட்டை மொத்த வியாபாரி இவர். சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக வாத்து முட்டைகளை வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதற்காக கடந்த 30ம் திகதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இது பற்றி காளிமுத்துவின் மனைவி அருள்செல்வி ரயில்வே பொலிசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். காளி முத்துவின் தொலைபேசி நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது.

காணாமல் போன அன்று அவர் யார்-யாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அவருக்கு அழைப்பு எடுத்தவர்கள் யார்? என்பது பற்றிய தகவல்களை பொலிஸார் திரட்டினர் அப்போது சென்னையை அடுத்துள்ள வேப்பம்பட்டில் வசித்து வரும் சுஜாதா என்ற பெண் வியாபாரி காளிமுத்துவுடன் 5 முறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியது தெரிய வந்தது. அதே நேரத்தில் திருநின்றவூரை சேர்ந்த வேலு என்ற கொள்ளையனிடமும் சுஜாதா அடிக்கடி கைபேசியில் பேசியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சனிக்கிழமை மாலையில் வேலுவை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் காளிமுத்துவை கொன்று உடலை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று எரித்து விட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

சுஜாதா காளிமுத்துவின் கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. நகை பணத்துக்கு ஆசைப்பட்டு அவரே இக்கொலைக்கான சதித்திட்டத்தை தீட்டியிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியாகி உள்ளது முட்டை வியாபாரி கொலையுண்டது குறித்தும் கொலையாளிகள் சிக்கியது பற்றியும், சென்டரல் ரயில்வே பொலிஸார் நேற்று முன்தினம் காலையில் திகிலூட்டும் வகையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர். காளிமுத்துவின் கள்ளக் காதலியான சுஜாதா திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கணவன் மனைவி போல வேப்பம்பட்டில் வசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே காளிமுத்துவுக்கும், சுஜாதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. காளிமுத்து அடிக்கடி சுஜாதாவின் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கைநிறைய பணத்தையும் காளிமுத்து எடுத்துச் சென்றுள்ளார். எப்போதும் 10 பவுனில் கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலியையும் காளிமுத்து அணிந்திருப்பார் இது சுஜாதாவின் கண்ணை உறுத்தியது.

காளி முத்துவை கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டார். இதன்படி கடந்த 30ம் திகதி தொலைபேசியில் அழைத்து காளிமுத்துவை தனது வீட்டுக்கு வருமாறு சுஜாதா அழைத்தார். அதன்படி அன்று மாலையில் மதுபோத்தல்கள், பிரியாணி பொட்டலங்களுடன் வேப்பம்பட்டில் உள்ள சுஜாதாவின் வீட்டுக்கு காளிமுத்து சென்றார். அங்கு வைத்து மது அருந்தினார். உச்சக்கட்ட போதையில் இருந்தபோது காளிமுத்துவை சுஜாதா அவரது 2வது கணவர் முருகேசன், அவரது நண்பர் வேலு ஆகியோர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர்.

பின்னர் காளி முத்து அணிந்திருந்த செயின் பணத்தை கொள்ளையடித்தனர். இதன்பிறகு தலையை தனியாக துண்டித்து எடுத்த 3 பேரும், உடலை 12 துண்டுகளாக வெட்டி எடுத்தனர். துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும், தலையையும் தனித்தனியாக 3 கோணிப் பைகளில் கட்டி ஆந்திராவுக்கு உடலை கடத்திச்சென்று நகர் பகுதியில் ஆரணியாறு அணைப்பகுதியில் வைத்து எரித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி