ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

காங்கிரஸ் அரசிடமிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்

காங்கிரஸ் அரசிடமிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்

இந்திய அரசியலில் பெரும் திருப்புமுனையாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ. கட்சியில் வரும் தேர்தலை எதிர் கொள்ள அவர் பா.ஜ. பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் மோடி நாடுமுழுவதும் பிரசாரம் செய்து இந்த கட்சிக்கு ஆதரவை திரட்டுவார் என்று கட்சியின் தேசிய செயற்குழுவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இவருக்கு அளித்துள்ள இந்த பதவி மூலம் பா.ஜ.க. பெரும் எழுச்சி பெறும் என்றும் வரும் தேர்தலில் நல்ல வெற்றியை பெற முடியும் என்றும் மோடியின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புதிய பதவி பெற்ற மோடிக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியுடன் தொலை பேசியில் மோடி பேசி ஆசி பெற்றார்.

கோவாவில் நடந்த 2 நாள் தேசிய செயற்குழு கூட்ட முடிவுக்கு பின்னர் மோடியின் பதவி குறித்து கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

அவர் கூறுகையில், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள நரேந்திர மோடி பிரசார குழு தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடியின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிட்டும் என்றார். இந்த பேட்டியின் போது சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையர் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி காங்கிரஸ் அரசிடமிருந்து மக்களை மீட்டு விடுதலை பெற வேண்டும். அப்போதுதான் நாட்டை காப்பாற்ற முடியும் என்றார்.

காங்கிரஸ் அரசு நடவடிக்கையால் மக்கள் வெறுத்து போயுள்ளனர் என்றும் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் மக்களின் நம்பிக்கையை காங். அரசு இழந்து விட்டது. காங்கிரஸ் அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். காங். முன்னாள் துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் வைக்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி