வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

காட்சிப்படுத்தல் மூலம் கற்பித்தல் முறை

போட்டிப் பரீட்சை 18ம் திகதி

(16.07.2010 3.25pm)

ஆங்கில மொழிமூல ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை நாளை மறுதினம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 554 பட்டதாரி ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வகையிலேயே இந்தப் போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.

ஈராக் தீ விபத்தில் இலங்கையர் பலி

(16.07.2010 3.25pm)

ஈராக்கின் வடபகுதியில் இன்று இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஒருவர் உட்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் உயிர் இழந்த இலங்கையர் ஒரு தொலைத்தொடர்பு பொறியியலாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது

வைகோ மற்றும் நெடுமாறன் கைது

(14.07.2010 4.05pm)

தமழ்நாட்டில் சென்னை நகரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய அலுவலகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தமைக்காக ஏற்கனவே திரைப்பட இயக்குனர் சீமானும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.ன

யாழில் எரிபொருள் விலை குறைப்பு

(14.07.2010 12.30pm)

கிளிநொச்சியில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றது. யாழ் குடாநாட்டில் எரிபொருள்களின் விலையை லீற்றறுக்கு மூன்று ரூபாவால் குறைப்பதென்று இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

நாடெங்கும் டெங்கு மீண்டும் தீவிரம்; தடுப்பு நடவடிக்கைகளில் அரசு துரிதம்

BTI பக்றீரியா அடுத்த வாரம் சந்தையில்

149 பலி 21,000 பாதிப்பு

டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Sub Species Isrealensis) பக்aரியா இம்மாத இறுதியில் சந்தைக்கு விடப்படும் என்று கைத்தொழில் தொழில்நுட்ப நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எச்.எம். முபாரக் நேற்றுத் தெரிவித்தார். இந்த பக்aரியாவை எவரும் கொள்வனவு செய்து நுளம்புகள் பெருகும் இடங்களென சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசிறுவதற்கு ஏற்றவகையில் இவை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விவரம் »
 

கிழக்கு மாகாண தமிழ் மொழி செம்மொழி விழா நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்துக்கு வருகை தந்த அதிதிகளை ஆராத்தியெடுத்து வரவேற்பதைக் காணலாம்.
(படம்: நற்பிட்டிமுனை விசேட நிருபர்) (ரு-து)