வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010


இலங்கை துறைமுகங்களின் அபிவிருத்தி

இலங்கை துறைமுகங்களின் அபிவிருத்தி

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் சேவைகள் தொடர்பான நிகழ்ச்சித் திட்டம்

இலங்கை துறைமுகங்களின் கடலக மற்றும் சேவைகளை வழங்குவதற்கும் அவற்றினை விரிவுபடுத்துவதன் மூலமாக மேலும் சந்தை வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குமான நிகழ்ச்சித் திட்டம் (Marketing the sea post of Sri Lanka for Maritine and Logestic Inter Gration) கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.

சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் சேவைகளை வழங்குதல் செயற்பாட்டில் இலங்கை துறைமுகங்கள் ஆற்றும் பங்களிப்பு மற்றும் அதன் முன்னேற்றம் சர்வதேச கடலக போக்குவரத்துத் துறையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி இங்கு கவனஞ் செலுத்தப்பட்டது. இலங்கை துறைமுக அதிகார சபை மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஹால் கெப்பட்டிப்பொல உரையாற்றுவதையும், பேராசிரியர் சமல் குமாரகே, துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஸ்ரீரியத் பி. விக்கிரம, கலாநிதி ஸ்டேபன் கேனூள், சாலிய சேனநாயக்க ஆகியோரையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் காண்க.

அண்மையில் உக்ரேனிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டு வணிக பிரமுகர்களுக்கு விடுத்த அழைப்பின் பிரகாரம் எதிர்காலத்தில் இலங்கை கப்பல் நடவடிக்கைகளை மேற்கொள்ப் ளும் மத்திய நிலையமாகவும் பிராந்தியத்தில் பாரிய சேவைகளை வழங்கும் மத்திய நிலையமாகவும் செயற்படுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க இந்நிகழ்ச்சித் திட்டம் வழிவகுக்கும்.

உலகம் பூராவும் பரந்து காணப்படும் விமான மற்றும் கப்பற் சரக்குகளை கொண்டு செல்வதற்கென சேவைகள் வழங்கும் சந்தை வாய்ப்புகள் பல்வேறு மட்டங்களில் முன்னேற்றமடைந்துள்ளன. அதன் வருடாந்த பெறுமதி 320 அமெரிக்கன் டொலர் பில்லியன்களாகும். அதன் வருடாந்த வளர்ச்சி வேகம் 3-10% இடையிலாகும்.

ஆண்டு முழுவதும் ஒவ்வோர் போக்குவரத்து மற்றும் குத வசதிகளை வழங்குதல் மூலம் நன்கு பரீட்சயமுள்ள சேவை வழங்குதலை அறிவுபூர்வமான தொழிற்துறையில் விரிவாக்கிக்கொள்ளலாம். அவ்வாறே இந்த தொழிற்துறையினுள் உருவாகும் புதிய நுட்பங்களின் மூலம் நல்லதோர் முன்னேற்றத்தையும் காணலாம்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் சேவைகள் வழங்கும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமல் குமாரகே குறிப்பிடுகையில், தொழிற்துறைக்கு தேவைப்படுகின்ற இந்த நிகழ்ச்சித் திட்டம் கடந்த ஆண்டில் நான்கு நாட்கள் நடாத்தப்பட்டது. Wolln Gong (வோலோன் கோங்க்) பல்கலைக்கழகத்தின் துணையுடன் அது நடத்தப்பட்டது. இம்முறை ஒரு நாள் நிகழ்ச்சி நிரலிற்கு தஸ்மேனிய பல்கலைக்கழகத்தின் Australian Maritime College துணை புரிந்துள்ளது.

அவ்வாறே எதிர்காலத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் சேவைகள் வழங்கும் பீடம் எதிர்கால செயற்பாடுகளுக்கு துறைசார் நிபுணர்களின் துணையுடன் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தொடர்புபடுத்தும் படி இந்த நிகழ்ச்சித் திட்டத்தினை தொடர்ச்சியாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

இதில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் கெப்டன் நிஹால் கெப்பட்டிப்பொல கப்பல் நடவடிக்கைகள் மற்றும் சேவை வழங்கும் மத்திய நிலையமாக இலங்கைத் துறைமுக அபிவிருத்தி எனும் தலைப்பில் உரையாற்றினார். துறைமுக ஆணைக்குழு காலகட்டத்திலிருந்து தற்போது துறைமுகத்தை நிர்வாகம் செய்யும் துறைமுக அதிகார சபை நிறுவி முப்பத்தொரு வருடங்கள் வரை கழிந்த காலங்களை உள்ளடக்கியதாக அவரின் விரிவுரை காணப்பட்டது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், கடந்த காலத்தில் உலக பொருளாதார நெருக்கடி நிலவிய சந்தர்ப்பத்தில் கூட அச்சமின்றி துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எடுத்த முடிவினை ‘கொந்தளிப்பான சந்தர்ப்பத்தில் கப்பலுக்கு ஒரே பாதுகாப்பு தலைமைத்துவமாகும்’ என்று ஒப்பிட்டு உரையாற்றினார்.

ஏனென்றால் கப்பல் துறையானது உலகம் பூராவும் பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், துறைசார்ந்தோர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த போதும் துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு தேவையான முடிவினை எடுப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த முடிவினால் துறைமுக சேவை, உட்கட்டமைப்பு வசதிகள், கட்டடங்கள் உட்பட சகல அபிவிருத்தி திட்டங்களையும் ஆகக் குறைந்த செலவுடன் உள்நாட்டு உச்ச வளங்களைக் கொண்டு செய்து கொள்ள முடிந்துள்ளது.

அதற்காக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு, கெளரவ தலைவர் அவர்கள் அமைச்சின் செயலாளர் உட்பட துறைமுக முகாமைத்துவத்துக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கியமான முடிவினால் 1.5 அமெரிக்கன் டொலர் பில்லியன் பணத்தினை துறைமுக திட்டங்களுக்காக முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாக இருந்தது.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 30 வருடங்களின் பின்பு நாட்டில் சகல பிரதேசங்களிலும் உருவாகும் அபிவிருத்திக்கு இணையாக நீண்ட காலத்தின் பின்னர் உருவாகும் துறைமுகங்கள் அபிவிருத்தி பற்றி மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு தெற்கு துறைமுக திட்டத்திற்கு சமனாக நிர்மாணிக்கப்படும் புதிய நகர் திட்டம், திருமலை துறைமுகத் திட்டம், காலி உல்லாசப் படகுக் கப்பல் மத்திய நிலையத் திட்டம், கொள்கலன் கிராமத் திட்டம் பற்றியும் கருத்துத் தெரிவித்தார். அதனால் கொழும்புத் துறைமுகத் திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். நிகழ்வில் துறைசார் நிபுணர்கள், பலரும் கலந்து கொண்டனர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »