வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010


சிறுபோக அறுவடை ஆரம்பமான நிலையில் அறக்கொட்டி நோய் அச்சம்

சிறுபோக அறுவடை ஆரம்பமான நிலையில் அறக்கொட்டி நோய் அச்சம்

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் சிறுபோக அறுவடை ஆரம்ப மாகியுள்ள நிலையில் சில வயல் வெளிகளில் அறக்கொட்டி நோயின் தாக்கம் ஏற்பட்டிருப் பதாக விவசாயிகள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலை தொடருமாகில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை அறுவடை செய்யாது முற்றாக கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் செய்கைக்காக முதலீடு செய்தவற்றை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகின்றது.

காரைதீவு, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, வாங்காமம், திருக்கோயில், பொத்துவில், மற்றும் பாணமை ஆகிய பிரதேச விவசாயிகளுக்கே இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவது டன் உரிய நஷ்ட ஈட்டுத் தொகை யினைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யுமாறு பல விவசாய அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. (ஐ-ஞ)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »