வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 21ல்: புதிய பிரதமர் ஜூலியட் திடீர் அறிவிப்பு

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 21ல்: புதிய பிரதமர் ஜூலியட் திடீர் அறிவிப்பு

அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலி யட் கிலாட் சிறியளவான பெரும் பான்மைப் பலத்துடன் தேர்தலில் வெற்றிபெறுவாரென கருத்துக்கணி ப்பில் தெரிவித்துள்ளன.

ஓகஸ்ட் 21ம் திகதி பாராளு மன்றத் தேர்தல் நடைபெறுமென கடந்த சனிக்கிழமை பிரதமர் அறி வித்தார்.

பிரதமர் பதவியை ஏற்று மூன்று வாரங்களுக்குள் பிரதமர் தேர்தலை அறிவித்தமை அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் இதுவே முதற்தடவை யாகும்.

லேபர் கட்சியின் தலைமைப் பதவியையும் பிரதமர் பதவியையும் ஜில்யட் கிலாட் முன்னாள் பிரதமர் கெவின்ருட்டிடமிருந்து பெற்றுக் கொண்டார். கட்சியை செவின்ருட் சரியாக வழிநடத்தவில்லையெனவும் நாட்டுக்குக் கிடைத்த அரியவாய் ப்புகளை உரிய முறையில் பயன் படுத்தவில்லையெனவும் முன்னாள் பிரதமர் கெவின்ருட் மீது லேபர் கட்சி குற்றம்சாட்டியது.

இதனால் கெவின்ருட் பதவி விலக வேண்டியேற்பட்டது. ஆனால் தனது செல்வாக்கும். கட்சி யின் செல்வாக்கும், சரிவதற்கிடை யில் பிரதமர் ஜுலியட் கிலாட் தேர்தலை நடத்த தயாராகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள் ளன.

48 முதல் 52 வீதமான வாக்குக ளைப் பெறமென கருத்துக்கணிப் பீடுகள் தெரிவித்துள்ளன.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »