வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

சூடான் டர்புர் பகுதியில் பெருஞ் சமர் 75 படை வீரர்கள், 300 தீவிரவாதிகள் பலி

சூடான் டர்புர் பகுதியில் பெருஞ் சமர் 75 படை வீரர்கள், 300 தீவிரவாதிகள் பலி

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அவசர விஜயம்

சூடானின் சர்ச்சைக்குரிய டர்புர் பகுதியில் இடம்பெற்ற கடும் மோதலில் 75 இராணுவ வீரர்களும் முன்னூறு ஜே.ஈ.எம். போராளிகளும் கொல்லப்பட்டனர். ஒரு வாரகாலமாகத் தொடர்ந்த கடும் மோதலின் போதே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அத்துடன் மேலும் 86 ஜே.ஈ.எம். போராளிகளை அரச படையினர் கைது செய்தனர். இராணுவத்தினர் கூடுதலாக உயிரிழந்த மோதல் சம்பவம் இதுவென டர்புர் பிராந்தியத்துக்குப் பொறுப்பான இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

சூடானின் டர்புர் பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் மோசமான வன்முறைகள் தலைதூக்கின. அரசுக்கெதிரான போரில் ஜே.ஈ.எம். எஸ்.எல்.ஏ. போன்ற அமைப்புக்கள் ஆயுதப் போரில் இறங்கியுள்ளன. இதனால் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 27 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பு செய்துள்ளது.

ஆனால் 10 ஆயிரம் பேரே இறந்துள்ளதாக சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiர் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணைக்குள் சிக்கியுள்ளமை தெரிந்ததே. 2009 ஆம் ஆண்டு ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம் சூடான் ஜனாதிபதிக்குப் பிடியாணை வழங்கியது.

இதற்கு முன்னர் ஜே.ஈ.எம். அமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை. சூடான் அரபு அரசாங்கத்துக்கெதிராக டர்புரிலுள்ள சிறுபான்மையினர் போரில் இறங்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி டர்புர் சென்றுள்ளார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »