புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 

சம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் ‘கேஷ் வாசி 3’

சம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் ‘கேஷ் வாசி 3’ நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

வெற்றியார்களுக்கு மில்லியன் கணக்கான பண மற்றும் மேலும் பரிசுகள்

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையரின் பின்னணியில் நின்று அவர்களின் நலன்களுக்கு நல்லாதரவை வழங்கும் உறுதிப்பாட்டின் ஒன்றிணைந்த வடிவமான சம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் அண்மையில் அதன் விற்பனை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமான கேஷ் வாசி 3 இன் பரிசளிப்பு நிகழ்வினை பெப்ரவரி 24 ஆம் திகதி கொழும்பு 2, சேர் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள வங்கித் தலைமை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது.

எல்லைகள் எல்லாவற்றிற்கும் அப்பால் சென்று நலன்களையும் சேவைகளையும் தன்னிகரற்ற முறையில் வழங்கும் உறுதியான நிலைப்பாட்டில் சம்பத் வங்கி கேஷ் வாசி 3 நிகழ்ச்சித் திட்டத்தினை 2015 செப்டெம்பர் 1 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. மேற்படி ஆக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் சம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் வாடிக்கையாளர்கள் மில்லியன் ரூபா வரையிலான ஏராளமான பணப்பரிசுகளையும் ஏனைய பரிசுகளையும் வென்றிருந்தனர்.

கேஷ் வாசி 3 நிகழ்ச்சித் திட்டத்தின் முதற் பரிசாகிய ஒரு மில்லியன் ரூபா பெல்லன்விலவைச் சேர்ந்த சமீர தர்சன திசாநாயக்க என்பவருக்குக் கிடைத்துள்ளது. ஒரு வர்த்தகரான திசாநாயக்க சம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் வசதிகளை பயன்படுத்த சுமார் பத்து ஆண்டுகளாக இத்தாலியிலுள்ள அவரது நண்பர் அனுப்பி வந்த பணத்தை பெற்றிருந்தார். தான் கேஷ் வாசி 3 வாயிலாக வென்றெடுத்துள்ள ஒரு மில்லியன் ரூபா தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக திரு. திசாநாயக்க தெரிவித்தார்.

நான் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியான முறையில் சம்பத் வங்கி மூலமாகவே கொடுக்கல் வாங்கல்களைச் செய்து வருகின்றேன். பணங்களை அனுப்பவும் அனுப்பிய பணங்களைப் பெறவும் நம்பிக்கைக்குரிய ஈ ரெமிற்ரன்ஸ் சேவை பெரும் பாதுகாப்பாக விளங்கியது. நாம் சம்பத் வங்கியுடன் இடை விடாது ஈடுபட்டமைக்கு காரணம் பாதுகாப்பு என்பவற்கும் அப்பால் வங்கி தனது வாடிக்கையாளர்கள் விடயத்தில் காண்பித்து வந்து கவனிப்பும் கரிசனையும் இருந்தது.

இத்தகைய கணிசமான ஒரு பரிசினை அளித்தமை வங்கி எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையையையும் ஆர்வத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த பணப்பரிசானது எமது வாழ்க்கையை மாற்றுவதற்கானதாகும். இதற்கென சம்பத் வங்கிக்கு நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்

ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசை சம்பத் வங்கியிடமிருந்து பெறும் அதிர்ஷ்டசாலிகளான மூன்று வெற்றியாளர்கள் ஹேமந்த சோமசிறி, சரோஜா மயில்வாகனம், பீ.என். கனகரத்ன ஆகியோரவார்.

மேலும் LED தொலைக்காட்சிகள் ஐந்து, ஹோம் தியேட்டர்கள் பத்து, வாஷிங் இயந்திரங்கள் மூன்று, Hi Fi ஸ்றியோ தொகுதிகள் பத்து, குளிர்சாதனப் பெட்டிகள் இரண்டு என்பவற்றையும் ஆறுதல் பரிசுகளாக சம்பத் வங்கி வழங்கியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.