புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

Volvo S60 மற்றும் சொகுசு நிரம்பிய XC60SUV வாகனங்கள் இலங்கையில் அண்மையில் அறிமுகம்

Volvo S60 மற்றும் சொகுசு நிரம்பிய XC60SUV வாகனங்கள் இலங்கையில் அண்மையில் அறிமுகம்

Swedish Trading Company (PVT) Ltd றுவனம் கொழும்பு துறைமுகப் பகுதியின் வெளிச்ச வீட்டிற்கு அருகாமையிலுள்ள பிரபலமானழி Light House Galley விடுதியில் அண்மையில் நவீன Volvo S60  மற்றும் XC60 வாகன வகைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தியது.

பெற்றோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் கூடிய முற்றிலும் புதிய இந்த வாகனங்கள் மிகவும் நியாயமான விலைகளில் கிடைக்கப்பெறுகின்றன. ஸ்கன்டினேவியன் நாடுகள் என அழைக்கப்படுகின்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற வாகனங்களின் மேல் பிரியம் கொண்டுள்ளவர்களுக்கு இந்த இரு வகையான வாகனங்களும் நியாயமான விலைகளில் கிடைக்கப்பெறுகின்றன. உச்சப்பயனூடாக எரிபொருள் பாவனையோடு இப்புதிய இயந்திரங்கள் மகத்தான வாகனச்சவாரி அனுபவத்தை வழங்குகின்றன.

Volvo மற்றும் Proton வாகனங்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான உதவிப் பொது முகாமையாளரான றயன் டொட் கூறுகையில் ‘இந்த இரு புதிய வாகன வகைகளை அறிமுகஞ் செய்து வைத்துள்ளதன் மூலம் ‘ஆற்றல் மிக்க, மேம்பட்ட செயற்திறன் கொண்ட மற்றும் மிக குறைந்தளவிலான எரிபொருள் விரயம்’ என்ற பண்புகளுடன் குறைந்த செலவில் உச்ச பயனை கிடைக்கச் செய்வதே எமது நோக்கமாகும். நகர்வல பாதுகாப்பு (City Safe) மற்றும் பாதசாரிகளை கண்டறியும் திறன்(Pedestrian Detection) போன்றVolvo தொழில்நுட்பங்களின் நுணுக்கமான இணைப்புடன் வெளிவருகின்ற இப்புதிய வாகன வகைகள் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த, ஒரு உண்மையான மேம்பட்ட சொகுசு அனுபவத்தை கிடைக்கச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

Swedish Trading Company (PVT) Ltd நிறுவனத்தின் மூலமாக இந்த வாகனங்கள் இலங்கையில் கிடைக்கப் பெறுவதுடன், இரத்மலானையில் அமைந்துள்ள சேவை நிலையத்தின் துணையுடன் நிறுவனத்தின் உன்னதமான சேவை வழங்கலும் கிடைக்கப்பெறுகின்றது. 25 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாகVolvo வகுப்பு மோட்டார்கார் வண்டிகள் அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்று வாகன உலகில் ஒரு புதிய மாற்றத்திற்கான வழிகாட்டலையும் அறிமுகப்படுத்தியிருந்தது.

Swedish Trading Company (PVT) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான சந்ரா சேனநாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளரான துஷ்மந்த சேனநாயக்க மற்றும் அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.