புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
காணி, பொலிஸ் அதிகாரங்களை

காணி, பொலிஸ் அதிகாரங்களை

தரமாட்டார்கள் என்று நினைத்து

கேட்காமல் இருந்துவிட முடியாது

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்

ஒரு காலத்தில் பிள்ளையான் என்றால் கிழக்கில் படபடக்கும். (தற்போதும்தான்) முதலமைச்சரான புதிதில் ப்பூ... இவரா என்றுகூடச் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், கடந்துவிட்டிருக்கும் இந்த நான்கு ஆண்டுகாலம் கிழக்கில் வாழும் சகல மக்களுக்கும் ஒரு பொன்னான காலமாகத்தான் இருக்கிறது என்கிறார் முதலமைச்சர் சந்திரகாந்தன். யாருமே நினைத்தும் பார்த்திராத அளவுக்கு அரசியலை அக்குவேறு ஆணி வேறாக்கிப் பிய்த்து வைக்கிறார். போராட்ட காலம், அதற்குப் பின்னரான காலம் என்று பார்த்தால் சகல துறைகளிலும் தன்னையும் வளர்த்து தமிழ்ச் சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துபவராகத் திகழ்கிறார் என்பதை கடந்த வாரம் தேசிய வானொலியில் ஒலிபரப்பான ஓர் அரசியல் கலந் துரையாடலில் தெட்டத் தெளிவாகப் புரிய வைக்கிறார் முதலமைச்சர். ஏ.எம்.தாஜின் நெறிப்படுத்த லில் மக்கள் அவரிடம் எழுப்பிய சகல கேள்விகளுக்கும் அணுவும் பிச காமல் பதில் அளித்தார் முதலமைச்சர்.

"நாட்டின் ஏனைய மாகாணங்களைவிடவும் கிழக்கு மாகாணம் தனித்துவமானது. அங்கு தமிழ், சிங்கள, மக்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அதனால், அங்கு சில விசேட தேவைகள் உண்டு. கொழும்புக்கும் தென் பகுதிக்கும் சில தனித்துவமான பிரச்சினைகள் இருக்கலாம். அதேபோன்று கிழக்கில் வித்தியாசமான விடயங்கள் இருக்கின்றன. ஆகவேதான் பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்குத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படவிருக்கிறேன். இது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்படவும் தயாராக உள்ளேன். பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமாட்டார்கள் என்று நினைத்து அதனைக் கேட்டுப் பெற முயற்சிக்காமல் இருக்க முடியாது"

"உங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் கொள்கை ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இப்படி எதிரும் புதிருமாக உள்ள நீங்கள் அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த கடிதம் எழுதியிருக்கிaர்களே?"

"தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துக் கடிதம் அனுப்பி வைத்துள்ளபோதிலும் அவர்கள் இன்னமும் பதில் அளிக்காதுள்ளமை வேதனையளிக்கிறது. கொள்கைகள் வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் சார்பான விடயங்களில் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்படலாம். அதற்கும் அவர்கள் இணங்கி வராவிட்டால், நாம் எமது வழியில் பயணிப்போம். அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள்."

"கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீங்கள் தனித்திருக்க வேண்டும் என்று நினைக்கிaர்கள்.. ஆகவே அவர்களுடன் எப்படி உடன்பாடு ஏற்படும்?"

"இப்போது கிழக்கில் நீண்ட காலம் ஒரு தமிழ் முதலமைச்சர் இருக்கிறார். முன்பு வடக்கில் இருந்தவர் ஒரு வருடத்திலேயே எல்லாவற்றையும் குழப்பிப்போட்டுவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நான் அப்படி ஒரு அவப்பெயரைத் தேடிக்கொள்ளமாட்டேன். கிழக்கில் மூவின மக்களும் நிம்மதியாக வாழ்கிறார்கள். எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆகவே, கிழக்கு தனித்திருந்தால் வடக்கிற்கும் ஒரு முதலமைச்சர் வந்தால் இருவரும் இணைந்து மக்களின் நலன்களுக்காக பணியாற்றலாம். தமிழ் மக்களுக்கு இப்போதுதான் முதலமைச்சர் என்றால் யார்? எவ்வகையான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம், அமைச்சர்கள் ஐந்துபேர் இருக்கலாம்.. நிதியொதுக்கீடுகளைச் செய்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்யலாம் என்பதையெல்லாம் மக்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்."

"மாகாண சபை நிர்வாகம் மூலம் இதுவரை என்னென்ன விடயங்களைச் சாதித்திருக்கிaர்கள்?

"பல துறைகளில் மாற்றங்களைச் செய்திருக்கிறோம். சுகாதா¡ரம், கல்வி, விவசாயம் எனப் பல்வேறு துறைகளிலும் மக்கள் உணரும்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனைவிட கிழக்கு மாகாணம் யுத்தத்தால் மிகவும் நொந்துபோன பிரதேசம். அதனைப் படிப்படியாகத்தான் கட்டியெழுப்ப வேண்டும். என்றாலும் இதுவரை இயன்றளவு மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் கண்டிருக்கிறது. கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் ஊடாகப் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன."

"நீங்கள் இப்படிச் சொல்கிaர்கள், அதேநேரம் முஸ்லிம்கள் தனியலகு தேவை என்று கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிaர்கள்?"

"அவ்வாறான ஒரு தனியலகிற்கான தேவை முன்பு இருந்திருக்கலாம். இப்போது மக்கள் நல்ல புரிந்துணர்வுடன் வாழ்கிறார்கள். சகல பகுதிகளும் பாகுபாடின்றி அபிவிருத்தி கண்டு வருகின்றன. எனவே தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்குத் தனியான அலகொன்று அவசியம் இல்லை என்றுதான் சொல்வேன்., வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக இயங்கி வருவதால் தனியலகுக்கான தேவை கிடையாதென்பது என் கருத்து.

"தனி நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய நீங்கள் இன்று மாகாண சபை பற்றிப் பேசுகிaர்கள். இதனைக் காலம் கடந்த ஞானம் என்று சொல்லலாமா?"

"அப்படியானால், முன்னாள் தலைவர்கள் எல்லோரையும் குழியிலிருந்து தட்டியெழுப்பித்தான் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் காட்டிய வழிகள்தான் ஆயுதப்போராட்டத்திற்கு வழிவகுத்தது. அன்று தனிநாடு, பின்னர் சமஷ்டி, இப்போது மாகாண சபை என்று வந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் பேசிப் பேசி எதனையும் சாதிக்க முடியாது என்பது தெட்டத் தெளிவாகியிருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பதுதான் தற்போதைய நிலவரம். வடக்கு கிழக்குப் பகுதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை நிர்வாகத்திற்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் சட்ட ரீதியாகக் குறித்தொதுக்கப்பட்ட விடயமாதலால், அதனைக் கேட்டுப் பெறும் உரிமை எமக்கு உண்டு. எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை நாம் தோற்றுவிக்க வேண்டும்."

"புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள நாடு நகர சட்டத்திற்கு நீங்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதன் உண்மைத்தன்மை என்ன?"

"மாகாணத்திற்கெனக் குறித் தொதுக்கப்ப்ட்ட சில விடயங்கள் சட்டத்தில் உள்ளன. ஆனால், இந்த நாடு நகர திட்டத்தின் மூலம் எமக்கு ஏற்படும் பாதிப்பு களை அனுமதிக்க முடியாது. நாம் அதுபற்றி மத்திய அரசாங் கத்துடன் விரிவான கலந்துரை யாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.