புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

அரசனை நம்பி புரு'னை கைவிட்ட

அரசனை நம்பி புரு'னை கைவிட்ட

நிலையாக அமைந்துவிடக் கூடாது!

சர்வதேசம், சர்வதேசம் என்று கூறிக் கொண்டே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தை பின்தள்ளிக் கொண்டு செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலைத் தோற்றுவிக்கும் முயற் சிகளில் தோல்வியைக் கண்டுவருகிறது. முப்பது வருடங்களாக புலிகளை நம்பி ஏமாந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் இன்னும் முப்பது வருடங்கள் இந்த தமிழ்க் கூட்டமைப் பினரை நம்பி ஏமாற வேண்டுமென்பது அவர்களது தலையெழுத்தாக அமைந்துவிட்டது போலவே தெரிகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடக்களாகியுள்ள போதிலும் ஆரம் பக் கட்டத்தைக் கூட எட்டமுடியாத நிலையிலேயே தீர்வுக்கான முயற்சிகள் உள்ளன.

ஏதோ ஒருவிதமான பரஸ்பர விட்டுக்கொடுப்பு புரிந்துணர்வு, இணக்கப்பாடு என்பவற்று டன் அரசுடன் பேச்சை நடத்தி தீர்வுகாண்பதை விடுத்து விடாப்பிடியாக சர்வதேச உதவி, தலையீடு, அழுத்தம் எனத் தொடர்ந்தும் செயற்பட்டுவரும் தமிழ்க் கூட்டமைப்பின் செயலி னால் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.

தமது குடும்பங்களையும், நெருங்கிய உறவுகளையும் பாதுகாப்பாக இந்தியாவிலும், ஐரோ ப்பிய நாடுகளிலும் குடியுரிமையுடன் குடியமர்த்திவிட்டு இங்கு அரசியல் தொழில் புரிந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள், உள்ளூரில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை விளங்கிக் கொள்ளாதவர்களாகவே செயற்படுகின்றனர்.

புலிகள் தம்மிடம் பாரிய ஆயுத பலம் இருப்பது போலக் காட்டி தமிழ் மக்களை மயக் கிய மாயை போன்றே இன்று தமிழ்க் கூட்டமைப்பும் தமது வீரவசனம், ஆவேசமான பேட் டிகளைக் காட்டி தம்மிடம் ஏதோ பாரிய அரசியல் சக்தி இருப்பதாக தமிழ் மக்களை ஏமா ற்றி வருகிறது. அவர்களும் இதை நம்பி தமது எதிர்கால விடிவுக்காகத் தமது வாக்குகளை கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குச் சகல தேர்தல்களிலும் வழங்கினர். ஆனால் அத னைக் கூட்டமைப்பினர் இன்று தமது சொகுசு வாழ்விற்காகவே பெரிதும் பயன்படுத்தி வரு கின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது வன்னியில் மக்கள் பட்ட இழப்புகள் அழிவுகள், துன்பங்கள் இன்னமும் ஆறவில்லை. ஆயுதவழிப் போராட்டம் இனிச் சரிப்பட்டு வராது என்பதை வன் னியில் யுத்தக் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்து மீண்டு வந்த மக்கள் நன்கறிவர். இது எது வுமே அறியாத கூட்டமைப்பு தலைவர்களால் இன்னும் வீரவசனங்கள் பேசப்படுகின்றன. இது அழிவுக்குள்ளான மக்களை மேலும் அழித்தொழிக்க முயலும் செயலாகவே அமைந் துள்ளது.

யுத்தத்தின் தாக்கம் எதனையுமே அனுபவிக்காத ஏனைய தமிழ் மக்களுக்கு தமிழ்க் கூட் டமைப்பு இன்னுமொரு புலிகள் போலவே தோன்றுகிறது. கூட்டமைப்பின் தலைவர்கள் கைகளில் ஏந்தித் திரியும் போர்க் குற்றச்சாட்டு பைல்கள் கனரக ஆயுதங்களாகவும், இவர் கள் விடும் வீரவசனங்கள் வெடிக்கும் பீரங்கிகளாகவும், ஊடக அறிக்கைகள் கண்ணிவெடி களாகவும் எண்ணி மகிழும் பல தமிழர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் போன்று யுத்தத்தினால் எவ்விதமான பாதிப்புக்களையுமே சந் திக்காது தமது பிள்ளைகள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தில் இங்கு சொகுசு வாழ்வு வாழ்பவர்களாக உள்ளனர்.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் என்னதான் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டாலும் தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு அரசியல் காரணமாக அவை முழுமை பெறாத நிலையி லேயே உள்ளன. யுத்தத்தின் கோரமான அழிவு, பாதிப்பு, இழப்பு என்பவற்றை ஈடுசெய்ய முடியாத நிலையில் மக்கள் இன்னமும் உள்ளனர். அம்மக்கள் பற்றி எவருமே சிந்திப்பது கிடையாது. அதிகாரம் வேண்டும். ஆட்சி செய்ய வேண்டும். இதுவே எல்லோரதும் கனவு.

இக்கனவில் தானே புலிகளும் இருந்தனர். ஆயுத முனையில் ஆட்சியும் புரிந்தனர். கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் நழுவவிட்டனர். இறுதியில் முழுப்பழியையும் அரசாங் கங்கள் மீது போட்டுக் கொண்டு வந்தனர். முடிவு என்னவாயிற்று? இன்று புலிகளும் இல்லை. புலிகட்டுப்பாட்டுப் பிரதேசமும் இல்லை.

இவ்வளவும் தெளிவாகத் தெரிந்திருந்தும் தமிழ் மக்களை மீண்டுமொரு அழிவிற்குள் தள்ளிவிட தமிழ்க் கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டுமா?

சர்வதேசம் என்று கூறிக்கொண்டு காலத்தைக் கடத்தி வருவது காதில் பூ சுற்றும் கதை. அப்படியே சர்வதேசம் வருவதானாலும் முள்ளிவாய்க்காலில் வந்து உதவாத சர்வதேசமா இனிவந்து எமக்கு உதவப்போகிறது. இன்று கூட்டமைப்பினர் சர்வதேசத்திற்குச் சென்று உயரதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் சந்திப்பதும், அவர்கள் இலங்கை வரும் போது இங்கு ஓடிச்சென்று சந்திப்பதுவுமாகவே காலம் கடந்து செல்கிறது.

இந்த சர்வதேசத்தின் தொடர் நம்பிக்கையால் உள்ளூரில் அரசாங்கத்தைப் பகைத்து நிற்ப துவும், சகோதர இனமான பெரும்பான்மையின மக்களின் நம்பிக்கையை இழந்து எதிரிகள் போல அவர்கள் எம்மை நோக்குவதுமே நாம் கண்ட பலன். இது எமக்குத் தேவையா?

சர்வதேசம் ஒருதுளி நம்பிக்கையையாவது தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்திய சம்பவம் இது வரை ஏற்பட்டதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அப்படியிருக்கையில் தமிழ்க் கூட்டமைப்பு இனியும் சர்வதேசத்தை நம்பியிருப்பது அரசனை நம்பி புருஷனைக் கை விட்டது போலவே ஆகிவிடும். இதனால் பாதிக்கப்படுவது ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் இரட்டை பிரஜாவுரிமையும், சொந்த வீடுகளும் வைத்திருக்கும் கூட்டமைப் பின் தலைவர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ அல்ல, அப்பாவித் தமிழ் மக் களே!

எனவே இனியும் விதண்டாவாதம் பேசாது, விடாப்பிடியாக நிற்காது விட்டுக்கொடுப்பு டன் ஒரு தீர்வினைக் கண்டு இன்னலை மட்டுமே சந்தித்து, இனிய உறவுகளை இழந்து அநாதைகளாக நிற்கும் தமிழினத்திற்கு விடியலைத் தேடித் தர வேண்டும் என்பதே அம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

[email protected]

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.