புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
கிரிஜா பிரசாத் கொய்ராலா காலமானார்

கிரிஜா பிரசாத் கொய்ராலா காலமானார்

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரு மான கிரிஜா பிரசாத் கொய்ராலா நேற்று காலமானார். அவருக்கு வயது 87. கடந்த சில ஆண்டுகளாக அவர் நுரையீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். அவர் கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டார். 4 நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பினார். மகள் வீட்டில் ஓய்வு பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந் தார். தகவல் கிடைத்ததும் பெருந்திரளான மக்கள் அவரது மகள் வீட்டுக்கு திரண்டனர். பிரதமர் மாதவ் குமார் நேபாள், மந்திரிகள் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஐந்து தடவைகள் நேபாளத்தின் பிரதமராகப் பதவி வகித்த கிரிஜா பிரசாத் கொய்ராலா, ஆயுதப் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகளை அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.

அதேநேரம், 240 ஆண்டுகால மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டி நேபாளத்தை குடியரசாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.