புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
வரலாறு விரியும் சாக்கடல் சங்கதி
மக்கத்து ஹா'pம் குல புகழ் கூறும் ஜோர்தான் தேசம்

வரலாறு விரியும்

சாக்கடல் சங்கதி

சாக்கடல் -  Death Sea

இதனை அரபியில் ‘பஹ்ருல் மையித்’

என அழைப்பர்.

சாவுக்கு ஒரு கடலா...? அல்லது கடலுக்கு ஒரு சாவா...?

அம்மான் நகரிலிருந்து இக்கடலை நோக்கி மோட்டார் பவனியில் செல்லும் போது, இப்படியான ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.

பெயரைக் கேட்டவுடன் எவருக்கும் வியப்பேற்படும் என்று சொல்வர்... இதற்கு நான் விதிவிலக்காக இருக்க முடியுமா? விளக்கம் தேட முற்பட்டேன்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், மன்னரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் மேற்கு எல்லையில் இஸ்ராயிலும் மேற்குக் கரையும், கிழக்கில் ஜோர்தான் தேசமும் அமைந்துள்ளன.

இதன்கரையோரம் 422 மீற்றர் (1385 அடி) சுற்றளவு கொண்டது. கடல் மட்டத்தில் 378 மீற்றர் (1340 அடி) ஆழமானது. உலகிலேயே மிகவும் கடுமையான உப்புக் கரிக்கும் மாபெரும் ஏரியாகும். இது கடல் நீரின் உவர்த் தன்மையை விட 8.6 மடங்கு உவர்த் தன்மை கொண்டது. இங்கு சூழல் மிக மிகக் கர்ணகடூரமாக இருப்பதனால், இக்கடல் உயிரினங்கள் வாழ ஏதுவாகாது; ஜல ஜந்துக்கள் இதில் வாழ முடியாது.

உயிரற்ற இடம் சாவிடம் - எனவேதான், வியப்பானாலும் இதற்கு சாக்கடல் -  Death Sea  எனப் பெயர் வந்தது.

இதனை ‘உப்புக் கடல்’ (Salt Sea) என்றும் அழைப்பர், மெளனக் கடல் என்றும் சாக்கடலுக்கு மற்றுமொரு பெயர் வழங்கப்படுகிறது. இது 67 கி.மீ. (42 மைல்) நீளமும், 18 கி.மீ (11 மைல்) அகலமும் கொண்டது.

மெளனமாக வரலாறு சொல்லும் வாவி

ஆயிரமாயிரம் வருடங்கள் பின்னோக்கிச் செல்கின்ற நெடும் வரலாற்றைக் கொண்டது இந்த சாக்கடல்.

மத்திய தரைக் கடல் பிரதேசம் ஈறாக வாழ்கின்ற மக்களின் கவனத்தை ஈர்த்த இடம் இது.

விவிலிய நூலிலும், அல்-குர்ஆனிலும் பல வியத்தகு குறிப்புக்கள் இக்கடலைப் பற்றி இடம்பெற்றுள்ளன. புவி மேற்பரப்பில் உள்ள மிகவும் தாழ்ந்த பகுதியும் இந்த சாக்கடல் பிரதேசமே.

இப்பிரதேசம் ஓர் உல்லாசப் புரியாக இருந்ததாக விவிலிய நூல் விபரிக்கிறது. உலகில் முதலாவது ஆரோக்கியப் புகலிடமாக - கோடைக்கால வாசஸ்தலமாக - இது விளங்கியது.

மனித நாகரீகத்தின் ஆரம்பத்திலிருந்தே இக்கடலிலிருந்து மக்கள் பல ஆரோக்கியமான பொருட்க¨ளையும் பெற்று வந்துள்ளனர். எகிப்திலுள்ள மம்மிக்களை (Mummies) அவை கெட்டுப் போகாமல் ஆயிரக்கணக்கான வருடங்கள் பாதுகாப்பதற்குரிய பாம் (Balm) வகைகள் இக்கடற் பிரதேசத்திலிருந்துதான் பெறப்பட்டுள்ளது.

உர உற்பத்திக்குத் தேவையான பொட்டாசியம் இங்கு பெருமளவில் காணப்படுகிறது.

இக்கடலிலிருந்து பெறப்படும் உப்பு மற்றும் கனிப்பொருட்கள் வகைகள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கும், மூலிகைகளுக்கான பொட்டலங்கள் (Sechets)  செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

பாவத்தின் - புண்ணியத்தின் நடுநிலம்

பண்டைய காலத்தில் இது பாவத்தின் விளை நிலமாகவும் விளங்கியது.

மன்னர் அப்துல்லாவும், எமது ஜனாதிபதியும்

லூத் நபியவர்கள் (Prophet Luth)  வாழ்ந்ததும் இந்த சாக்கடல் பிராந்தியத்தில்தான் என அல்-குர்ஆன் கூறும் வரலாற்றிலிருந்து நாம் அறிய முடிகின்றது.

இங்கு பாலைகளிலும், பட்டணங்களிலும் வாழ்ந்த மக்களை துஷ்டர்களாக - பாவிகளாக - துன்மார்க்க குணமுள்ளவர்களாக - உலகம் அன்று அறிந்து கொண்டது. கொலை, கொள்ளை, ஓரினச் சேர்க்கை முதலான இறைவன் வெறுத்த, மிகவும் பயங்கரப் பாவச் செயல்களில் இப்பிரதேச மக்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் புரிந்த பாவ கருமங்களுக்காக இறைவன் இம்மக்களுக்குப் பெரும் தண்டனை வழங்கினான். தண்டனை வழங்கிய விதத்தையும் அல்-குர்ஆன் விபரித்துக் கூறுகின்றது.

தலைகீழாகப் புரட்டப்பட்ட பூமி

லூத் நபி அவர்களிடம் இரண்டு விருந்தாளிகளை அல்லாஹ் அனுப்பி வைத்தான். இவர்கள் மனித உருவில் வந்து இரண்டு மலக்குகள் (தேவதூதர்கள்).இவர்கள் இருவரும் மிகவும் வசீகரத் தோற்றமுடையவர்களாக இருந்தனர்.

இவர்களுடைய வரவைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வூர் மக்கள் லூத் நபியுடைய வசிப்பிடம் விரைந்து சென்று தம் தீய எண்ணங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவ்விருவரையும் தம்மிடம் விட்டுவிடுமாறு வேண்டினர்.

லூத் நபியுடைய உம்மத்துக்கு அளிக்கப்பட்ட இறுதிச் சோதனை இதுவாகும். இறை கட்டளைப்படி ஜிப்ரீல் (அலை) அவர்களால் இந்த மக்கள் வாழ்ந்த பூமி பிடுங்கி தலை கீழாகப் புரட்டி மீண்டும் பூமிக்கு வீசப்பட்டது. இதனால் அப்பாவிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். லூத் நபியைப் பின்பற்றியோர் காப்பாற்றப்பட்டார்கள். இவ்வாறு அவர்கள் வீசப்பட்ட இடம் ஒரு பாரிய மடுவை உருவாக்கியது.

அல்குர்ஆனில் அர்-ரூம் எனும் 30ம் அத்தியாயம் இந்தப் பரிதாபமான நிலையை உலகோருக்குப் பறைசாற்றும் வண்ணம், சாக்கடல் பிரதேசத்தை இப்பூமியில் மிகவும் தாழ்ந்த பிரதேசமாகக் குறிப்பிடுகின்றது. நிலம் தாழ்ந்திருந்தது போல, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையும், நடைமுறைக ளும், அவர் தம் ஒழுக்கமும் பண்பாடுக ளும் தாழ்ந்திருந்த பாங்கினை வரலாற்றி னூடே நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

சீறுவதா...? சிரிப்பதா...?

பாவமும் புண்ணியமும் ஏட்டிக்குப் போட்டியாக உலக மாந்தர் வாழ்வில் ஒரு வரலாற்றை உருவாக்கிய பூமி இது. இந்நிலத்தைச் சென்று பார்த்த போது சீறுவதா அல்லது சிரிப்பதா என்ற ஒரு திரிசங்கு நிலை என்னுள் ஏற்பட்டது...!

எது எப்படியாக இருந்தாலும், மனித வரலாற்றில் யூத - கிறிஸ்தவ - இஸ்லாமிய தடங்கள் பொதிந்திருந்த புவியின் ஒரு கோணத்தைக் காணக்கிடை த்ததும் வாழ்வில் நாம் அடைந்த ஒரு பேரனுபவம் என்று கருதலாம்.

இறைவனுடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றவர்கள் அனுபவிக்கக் கூடிய தண்டனைகள் எவ்வாறிருக்குமென்பதையும் நாம் நேரில் கண்டறியும் சந்தர்ப்பத்தை இவ்விஜயம் எமக்கு ஏற்படுத்தித் தந்தது.

ஜோர்தானிய இராஜ்ஜியத்துக்கான நிருவாகம் அமைக்கப்பட்ட பிறகு பூகற்பவியலாளர்களும், பூகோள ஆய்வாளர்களும் இங்கு விஜயம் செய்யத் தலைப்பட்டுள்ளனர்.

இங்கு பல நூதன நிலப்பகுதிகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து வருகின்றனர்.

இங்குள்ள ஆயிரக்கணக்கான கனிய வளங்களை ஆய்வுசெய்து வருகின்றனர். இங்கு நிலவும் அற்புதமான சீதோஷண நிலை பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். இதனால் நவீன உலகில் பல புதிய தேடல்கள் - முடிவுகள் - தோன்ற ஆரம்பித்திருக்கின்ற காலகட்டம் இது.

ஆய்வு எனும் பொழுது அலைந்து திரியும் தேச சஞ்சாரிகளுக்கும் - உல்லாசப் பிரயாணிகளுக்கும் - இப்பிரதேசம் புதுப்பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் இடமாகவும் பரிணமிக்கத் தலைப்பட்டுள்ளது.

1960 முதல் இங்கு இந்தப் புதுத் திருப்பம்...

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.