புத் 63 இல. 12

விரோதி வருடம் பங்குனி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 04

SUNDAY MARCH 21, 2010

 
.
தேசநிர்மாண அமைச்சு மூலம் 1036 இணையக் கிராமங்கள்!

தேசநிர்மாண அமைச்சு மூலம் 1036 இணையக் கிராமங்கள்!

தேச நிர்மாண அமைச்சின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1036 இணைய கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி தெரிவித்தார்.

இந்தக் கிராமங்களுக்குத் தனித்தனியான இணையத் தளங்கள் உருவாக்கப்பட் டுள்ளதுடன் அனைத்துக் கிராமங்களையும் ஒரே இணையத் தளத்தில் அறிந்து கொள்ளவும், கிராமத்துக்குக் கிராமம் தொடர் புகளை ஏற்படுத்தி அவர்களின் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கும் வழி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறினார். www.gamaneguma.lk என்ற இணை யத்தில் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களும் பதிவு செய்யப்பட்டு ள்ளன.

அதேபோன்று 1168 கிராமங்களு க்கு இணையத் தளங்களை உருவா க்கும் திட்டத்தில் இதுவரை 1036 கிராமங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.