புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
தமிழர் ஒற்றுமை, பலம் எனக்கூறி பெறும் வாக்குகள் இம்முறையும் தாரைவார்ப்பா?

மத்திய கொழும்பை பலப்படுத்த ஹிருணிகாவும் ஓர் உந்துசக்தி

இணைந்து பணிபுரிய இருவரும் சந்தித்துரையாடல்

மத்திய கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமசந்திரவை தான் ஆட்சேபிக்கவில்லை. மத்திய கொழும்பை மேலும் பலப் படுத்துவதற்காகவே அவரை ஜனாதிபதி நியமித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதி பதிக்கு நான் நன்றி தெரிவிக் கின்றேன். என் சார்பில் போட் டியிடும் வேட்பாளர், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மத்திய கொழும்பு வாழ் மக்கள் ஆகியோருடன் இணை ந்து கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று பிரதி அமைச்சர் தெரி வித்தார். மத்திய கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணை அமைப்பாளராக புதிதாக அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய கொழும்பு இணை அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

ஹிருணிகா பிரேமச்சந்திரன் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி என்னை மத்திய கொழும்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய இணை அமைப்பாளராக நியமித்துள்ளார். இதற்காக ஜனாதிபதிக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை வேட்பாளருமான எம்.எச்.எம். மன்ஸில், ஹோமாகம பிரதேச சபை பிரதித் தலைவர் இந்திக்க கோரளகே, கொழும்பு மாநகர சபை மற்றும் ஏனைய நகர சபை, பிரதேச சபைகளைச் சேர்ந்த 37 உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.