புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
போர்க் குற்றச்சாட்டு சுமத்தும் நாடுகள் மீதும் விசாரணை தேவை

போர்க் குற்றச்சாட்டு சுமத்தும் நாடுகள் மீதும் விசாரணை தேவை

ஐ.நா. பேரவையில் பிரேரணை கொண்டுவர ரிசிஞிலி தீர்மானம்

இலங்கைக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் நாடுகள் இழைத்திருக்கும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனும் பிரேரணையொன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யில் சமர்ப்பிப்பதற்கு ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பு (ரிசிஞிலி) தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் ஜெனீவா நகரில் நடைபெறவிருக்கும் 25வது தொடர் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யுத்த முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள நாடுகளை முத லில் விசாரிக்க வேண் டுமென ஐரோப்பிய

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜெர்மன் நாட்டு ஆலோசகர் அன்ரென்ஸ் அக்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லும் போர் குற்றம் பற்றி விமர்சிக்கும் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா கடந்த காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட போர்க் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.

மேலும் 2003-2008 காலப்பகுதியில் ஈராக்கிற்கு எதிராக பிரித்தானியா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் சம்பந்தமாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தவித நடவடிக்கையும் விசாரணையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அப்படியானால் இலங்கைக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்ச அழுத்தம் என்று சுக்லர் கேள்வி எழுப்பியுள்ளார்.

(எம்.கே.முபாரக் அலி)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.