ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

அதிக கோல் அடித்த இங்லாந்து வீரர் என்ற பெருமை பெற ரூனி திட்டம்

அதிக கோல் அடித்த இங்லாந்து வீரர் என்ற பெருமை பெற ரூனி திட்டம்

இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரரான வெய்ன் ரூனி, அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை தட்டிச் செல்ல தனக்குத் தானே இலக்கு வைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர முன் கள வீரரான ரூனி, கழக போட்டிகளில் சில நேரங்களில் நடுக்கள வீரராகவும் களம் இறங்குகிறார். இதனால் அவருக்கு அதிக அளவு கோல் அடிக்கும் வாய்ப்பு எட்டாமல் போய் விடுகிறது. இந்நிலையில் வரும் பருவகாலத்தில் தொடர்ச்சியாக முன்கள வீரராக (ஸ்ட்ரைக்கர்) களம் இறங்கி அதிக கோல் அடித்து சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சார்ல்டன் கடந்த 1956 முதல் 1973 வரை கிளப் மற்றும் சர்வதேச போட்டி என எல்லா வற்றிலும் சேர்த்து 249 கோல் அடித்துள்ளார். ரூனி 230 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது இங்கிலீஷ் பரிமீயர் லீக் போட்டி தொடங்க இருக்கிறது. இதில் 20 கோல் அடித்து சார்ல்ட்ன் சாத னையை முறியடிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து ரூனி கூறுகையில், 'கால்பந் தில் என்னுடைய சிறந்த இடம், நான் ஏற்க னவே சொல்லியிருக்கிற மாதிரி ஸ்ட்ரைக்கர் (முன்கள) நிலைதான். இரண்டு பருவகாலத் தில் நான் சிறப்பாக செயல்பட்டேன். ஸ்ட் ரைக்கராக இருந்து என்னுடைய சிறப்பான இரண்டு கோல்களை அடித்தேன்.

இந்த பருவகாலத்தில்; 20 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடிப்பேன் என்று நம்புகிறேன். நான் ஸ்ட்ரைக்கராக செயல்பட்டு சிறப்பாக விளையாட முடியாவிட் டால் மிகுந்த ஏமாற்றம் அடைவேன். யுனைடெட் அணிக் காக நான் பல்வேறு நிலைகளில் (நடுகள, முன்கள) விளை யாடியுள்ளேன். ஆனால், இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது ஸ்ட்ரைக்கராக மட்டுமே செயல்பட்டுள்ளேன்' என்றார்.

ரூனி ஸ்ட்ரைக்கராக களமிறங்குவதை யுனைடெட் கழக அணி முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக ரூனி 48 கோல் அடித்துள்ளார். இன்னும் ஒரு கோல் அடித்தால் கார்ல்டன் சாதனையை சமன் செய்வார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி