ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
அதிகம் தொலைக்காட்சி பார்த்தால் விரைவில் மரணம்


 

அதிகம் தொலைக்காட்சி பார்த்தால் விரைவில் மரணம்

பாஸ்டன், “இடியட் பாக்ஸ்” என்ற அழைக்கப்படும் தொலைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக நேரம் தொலைக் காட்சி பார்ப்பதினால் சர்க்கரை நோய், இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்படும் என்று அமெரிக்காவிலுள்ள “ஹார்வர்டு ஸ்கூல் ஒஃப் பப்ளிக் ஹெல்த்’ என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் சர்க்கரை வியாதி வரும் என்றும், 3 மணி நேரத்துக்கு அதிக மாக தொலைக்காட்சி பார்த்தால் இதய அடைப்பு ஏற்படும் என்றும், அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங்க் ஹு மற்றும் கிராண்ட்வெட் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுத்தச் சொல் வது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடு வதால் எற்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிராங்க் தெரிவித்தார்.

அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதால் நீரிழிவு நோயோடு உடல் பருமனும் ஏற்படும் என்று கிராண்ட் வெட் தெரிவித்தார். 1970 லிருந்து 2011 வரை தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை யும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

சரித்திரம் படைத்த பறக்கும் பட்டம்-1

முதன் முதலில் பட்டங்களைக் கண்டு பிடித்தவர்கள் சீனர்கள். சீனாவின் கண்டுபிடிப்பான பட்டம் நவீன விமா னங்களின் முன்னோடியாகக் கருதப்படு கிறது. காற்றை விட இலேசான பலூன் முதன் முதலில் 1783 இலும் விசை விமானம் 1903 இலும் பறக்கவிடப்பட் டன என்பார்கள். இவை சீனப்பட்டத்தின் வரலாற்றை ஒப்பு நோக்கினால் மிகவும் சமீப காலங்களில் நடந்தவை என்றே சொல்ல வேண்டும்.

16-17 ஆம் நூற்றா ண்டுகளில் ஜப்பானுக்கும் தென்கிழக் காசியாவுக்கும் இடையில் பட்டம் விற்கவும் வாங்கவும் பட்டிருக்கின்றன. சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பட்டம் கண்டுபிடிக்கப்பட்டி ருகின்றது.

சுமார் கி.மு. 200ல் ஹ்ஹன் முடியாட்சியின் போது சீனத் தளபதி ஹன் ஹ்யூஸின் ஒரு நகரின் கோட்டைச் சுவரைத் தாண்டிப் பறந்த பட்டத்தை வைத்து மாளிகையின் அரண்களின் தூரத்தையும் எண்ணிக்கையையும் அறிந்தார்களாம். அதன் பிறகு நகருக் குள் புகுந்து ஆக்கிரமிக்கவும் வென்றி டவும் செய்தார்களாம். முதன் முதலில் பட்டம் பறக்கத் தொடங்கியதற்கான சான்றுகள் இங்கிருந்துதான் தொடங்கின.

ஒருமுறை ஒரு சீன விவசாயி பறந்து விடாதிருக்க தன் தொப்பியில் ஒரு நூலைக் கட்டிக் கொண்டிருந்தான் என்றும் பலத்த காற்று அடித்ததில் முதல் பட்டம் பிறந்தது என்று சீனப் புராணக்கதை ஒன்றும் சொல்வதுண்டு. பட்டம் ஆசியாவிற்குள் பரவி, பின்னர் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற வேறு கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது.

ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணி யையும் பாரம்பரியத்தையும் ஏற்படுத்திக் கொண்டன. பட்டம் என்பது வெறும் விளையாட்டுப் பொருள் மட்டுமில்லை. அது விஞ்ஞானத் துறைக்கும் உற்பத்தித் துறைக்கும் பங்களித்திருக்கிறது. பட்டத் தைப் போன்ற வடிவில் தான் முதன் முதலில் விமானங்கள் தயாராகின.

பட்டங் களுக்கான அருங்காட்சியகம் அகமதா பாத்திலும், ஜப்பானில் டோக்யோ நகரி லும் உள்ளது. உலகப் பட்டத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14ம் நாள் அகமதாபாத்தில் கொண்டாடப்படுகிறது. சுமார் 2,500 கிலோ எடையுள்ள பட்டம் ஜப்பானில் பறக்க விடப்பட்டது. அமெ ரிக்காவில் சுமார் 5,400 மீற்றர் உயரத்தில் பட்டம் பறக்க விடப்பட்டது.

ஆதிகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப் பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்ட துறைகளைப் பற்றி குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானது. முதன் முதலில் இராணுவப் பயன்பாடு களுக்குள் வந்தன. பட்டங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை நோட்டம் பார்க்க வென்று மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவில் இருந்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி