ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

உள்நாட்டில் தயாராகும் மருந்துகள்

உள்நாட்டில் தயாராகும் மருந்துகள்

நம் நாட்டு நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளை நாமே தயாரித்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள அக்பார் பார்மசியுடிகல் நிறுவனம், அண்மையில் தாம் தயாரிக்கும் சில மருந்து வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.

இதை அறிமுகப்படுத்தும் வைத்தியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று கொழும்பு ஸினமன் க்ரான்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்வொன்று கூடல் நிகழ்வில் நம் நாட்டின் தலைசிறந்த வைத்திய நிபுணர்கள் பலரும் சமுகமளித்திருந்தனர்.

இம் மருந்து வகைகள் தயாரிக்க அக்பார் பார்மசியுடிகல் நிறுவனம் டாக்டர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் ஆலோசனையுடன் சிறப்பாக செவ்வனே தயாரிக்க முடிந்ததாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அஸ்கி அக்பர் அலி தெரிவித்தார்.

இம் மருந்து வகைகள் தயாரிப்பதுடன் அவற்றை மேலும் அபிவிருத்தி செய்யவும் நாட்டில் சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பை செய்யவும் உத்தேசிக்க அக்பார் நிறுவனம் இரத்மலானை பொருப்பனை வீதியில் லீனா மெனுபெக்சரிங் பிரைவட் லிமிட்டட் ரீழியினிதி  [LINA MANUFACTURING (PVT) LTD]  எனும் பெயரில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளது. இத் தொழிற்சாலை சுகாதார அமைச்சர் சிறிசேனவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் நாடு சுகாதார துறையில் நல்ல முன்னேற்றம் காணும் என்பது உறுதியாகிவிட்டது.

இது கால வரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல மருந்து வகைகள் இந்த லீனா தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அக்பார் பார்மசியுடிகல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு மருந்து வகைகளை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அக்பார் பார்மசியுடிகல் நிறுவனம் அதன் கன்னி முயற்சியாக மருந்து வகைகளை உற்பத்தி செய்து நாட்டு மக்களுக்கு மிக இலகு விலையில் மருந்து வகைகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக மருந்து வகைகள் தயாரிப்பதில் கால் பதித்துள்ளது.

இதற்கென ஜனாதிபதி விருது பெற்று செயல்படும் முன்னணி நிறுவனமாகவும் செயல்பட்டு வருவது பாராட்டுக் குரியதாகும்.

லீனா உற்பத்தி நிறுவனம் அதன் முதல் தயாரிப்புகளான இழுப்பு நோயுடன் சம்பந்தப்பட்ட மருந்து வகைகளை வைத்தியர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் கீழ் குறிப்பிடும் மருந்து வகைகளை அறிமுகம் செய்தது.

SALBUTAMOL- செல்பிடமோல்

BECLOMATHASONE -- பெக்லொமெதசோன்

SALMETAROL / FLUTICASONE - - செல்மெட்ரோல் / ப்ளுடிகசோன்

இந்த அறிமுக நிகழ்வில் அக்பர் பார்மசியுடிகல் நிறுவன பொது முகாமையாளர் ரொஹான் வெத்தசிங்க வரவேற்புரை நிகழ்த்தியதுடன், இலங்கை மருத்துவ உற்பத்தி, அபிவிருத்தி ஆய்வு நிலையத்தின் டாக்டர் கீர்த்தி குணசேகர பிரதான உரை நிகழ்த்தியதுடன், டாக்டர் அனில் குணதிலக்க, மொறட்டுவை பல்கலைக் கழக- பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜனக மான்சல- ஆகியோரும் உரை நிகழ்த் தினர். இறுதியில் உற்பத்தி பற்றி வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரடி சந்திப்பின் மூலம் பதில்களும் அளிக்கப்பட்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி