வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

கால் இறுதியில் நடால் – முர்ரே மோதல்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

கால் இறுதியில் நடால் – முர்ரே மோதல்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் நடால்- முர்ரே நேருக்கு நேர் மோதுகின்றார்கள்.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில், ‘செர்வ்’ செய்வதில் வல்லவர்களான உயரமான இரு வீரர்களின் சவாலை முறியடித்து நடப்பு சாம்பியன் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) 5ம் நிலை வீரர் ஆன்டி முர்ரேவும் (இங்கிலாந்து) கால் இறுதிக்கு முன்னேறினார்கள். 6 அடி 10 அங்குல உயரம் கொண்ட குரோஷியாவின், இவா கால்லோவிச்சை நடால் சந்தித்தார்.

விறுவிறுப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்ஙறியை ருசித்தார். அதிகப ட்சமாக மணிக்கு 222 கிலோமீட்டர் வேகத்தில் செர்வ் செய்தும், 28 ‘ஏஸ்’ சர்விஸ் போட்டும் அது கார்லோவிச்சுக்கு பலனை தரவில்லை.

ஆன்டி முர்ரே, 6 அடி 9 அங்குலம் உயரமுடைய அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் 22 வயதான முர்ரே 7-6 (4), 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று முதல் முறையாக கால் இறுதிக்கு முன்னேறினார். அதுமட்டுமின்றி 1985ம் ஆண்டு ஜான் வாயிட்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய ஒபனில் கால் இறுதிக்குள் நுழைந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

முர்ரே இதுவரை ஆடியுள்ள 4 ஆட்டத்திலும் ஒரு செட் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •