வரு. 78 இல. 22

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 10
விரோதி வருடம் தை மாதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 26, 2010

புதைபடிவங்களின் புதையல் சிக்கியது!

புதைபடிவங்களின் புதையல் சிக்கியது!

உயிர், முதன்முறையாக எதேச்சையான ஒரு நிகழ்வால் தோன்றியது என்பது விஞ்ஞானத்தின் கணிப்பு, முதலில் நீரில்தான் உயிரினங்கள் தோன்றியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. காலப்போக்கில் உயரினங்கள் நிலத்தில் வாழும் தகவமைப்பை பெற்று நீர்நிலைகளில் இருந்து நிலத்துக்கு வந்திருகின்றன என்று கூறப்படுகிறது.

தற்போது இதை உறுதிப்படுத்தும் சான்று கிடைத்துள்ளது. அதாவது முதன் முதலில் நீரில் இருந்து நிலத்துக்கு இடம் பெயர்ந்த உயிரினத்தின் புதைபடிவம் கிடைத்திருக்கிறது. போலந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் மலைப்பகுதியில் இதற்கான படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவை சுமார் 39.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 10.2 அங்குல அகலமுள்ள இந்த உயிரித்தின் காலடித்தடம் 8 அடி தூரத்துக்கு பதிந்துள்ளது. இவை மீன் இனத்தில் இருந்து நிலவாழ்வுக்கு ஏற்ப தகவமைப்பு பெற்ற ஒரு இடைநிலை உயிரினம் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. சுமாராக சிறிய பல்லி அளவில் இருந்திருக்கிறது.

இவை முன்னங்கால்களையும், பின்னங்கால்களையும் அழுந்தப் பதித்து உடலை கஷ்டப்பட்டு இழுத்துச் சென்றதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே இவை ஆரம்ப காலத்தில் உடலை லாவகமாக தூக்கி நகர முடியாத வளர்ச்சி பெற்றிருந்த காலமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இதேபோல மனிதனின் பாதச்சுவடு போன்ற தோற்றத்தில் மற்றொரு படிவமும் கிடைத்துள்ளது. இது ஒரு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது ஒரு கடல்வாழ் தேனாக இருக்கலாம்.

ந்த இரு படிவங்களையும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அப்சாலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள புதை படிவங்களில் இது மிகவும் காலத்தால் பழமையானது. அதேபோல் நீர்வாழ் உயிரினம் நிலத்துக்கு இடம் பெயர்ந்ததற்காக உறுதியான சான்றாகவும் இது இருப்பதால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே இதுபற்றிய ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •