வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010


கல்கமுவ பிரதேச மின்சார அபிவிருத்திக்கு ஈரான் பதினைந்து கோடி ரூபா உதவி

கல்கமுவ பிரதேச மின்சார அபிவிருத்திக்கு ஈரான் பதினைந்து கோடி ரூபா உதவி

கல்கமுவ தேர்தல் தொகுதியில் மின்சார வசதியற்ற கிராமங்களுக்கு மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுக்க ஈரான் அரசாங்கம் பதினைந்து கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக கல்கமுவ தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ரீ. பஸ்நாயக்க தெரிவித்தார்.

இந்நிதியுதவியினைப் பயன்படுத்தி தற்போது பன்னிரெண்டு மின் விநியோகத்திட்டங்களின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கும் ஒன்றரைக் கோடிக்கும் இடைப்பட்ட நிதி ஒருக்கீடுகளிலேயே இப்பன்னிரெண்டு மின்விநியோகத்திட்டங்களும் செயற்படுத்தப்படவுள்ளன எனவும் அமைப்பாளர் மேலும் தெரிவித்தார். (ஐ - ஞ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •