வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கப்டனாக நியமனம்?

அப்ரிடி பாகிஸ்தான் அணியின் கப்டனாக நியமனம்?

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் டில் தோல்விக்கு காரணம் என்ன? என்று பாகிஸ்தான் கப்டன் யூனிஸ்கா னிடம் அந்த நாட்டின் விளையாட்டு நிலைக்குழு விசாரணை நடத்திய போது ஆவேசமடைந்த அவர் கப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக அறி வித்தார்.

தென் ஆபிரிக்காவில் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நட ந்து முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. ஆனால் மழை நின்றாலும் தூறல் ஓயாது என்பது போல் பாகிஸ் தான் கிரிக்கெட்டில் சம்பியன்ஸ் கிரிக் கெட் மூலம் எழுந்த புகைச்சல் இன் னும் ஓய்ந்தபாடில்லை.

சம்பியன்ஸ் கோப்பை போட்டி யில் பாகிஸ்தான் அரை இறுதியுடன் வெளியேறியது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் பாகிஸ் தான் திறமைக்கு ஏற்ப ஆடவில்லை என்றும், முன்னதாக இந்தியா வெளி யேற வேண்டும் என்பதற்காக அவுஸ் திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத் தில் பாகிஸ்தான் வேண்டும் என்றே தோற்றதாகவும், இதன் பின்னணியில் ஆட்ட நிர்ணயம் என்ற சூதாட்டம் நடந்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு கள் எழுந்தன.

இதற்கான ஆதாரங் களை திரட்டி வருவதாக பாகிஸ்தா னின் தேசிய விளையாட்டு நிலைக் குழு பேரவைத் தலைவர் ஜாம்ஷெட் கான் தாஸ்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் சம்பியன்ஸ் கிரிக் கெட்டில் பாகிஸ்தானின் தோல்வி குறித்து விளக்கம் அளிக்கும்படி பாகி ஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட், கப்டன் யூனிஸ்கான், பயிற்சியாளர் இன்திகாப் ஆலம், அணி முகாமையாளர் யாவர் சயீத் ஆகியோருக்கு தேசிய விளையாட்டு நிலைக் குழு பேரவை மனு அனுப்பியது.

இதன் அடிப்படையில் இவர்கள் நேற்று முன்தினம் விளையாட்டு நிலைக்குழு பேரவை முன்பு ஆஜ ராகி விளக்கம் அளித்தனர். நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பிக்கள், ‘தோல்வியின் பின்னணியில் சூதாட் டம் உள்ளதா?’ உள்ளிட்ட சரமாரி கேள்விகளை அவர்களிடம் தொடுத்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறு தியில் யூனிஸ்கான் முக்கியமான தரு ணத்தில் கிரான்ட் எல்லிட்டின் பிடியை தவறவிட்டார். அது குறித்தும் நிலைக் குழு கேட்டதாக தெரிகிறது.

இவற்றி னால் கொதித்துப் போன, யூனிஸ்கான் கப்டன் பொறுப்பை ராஜினாமா செய் வதாக அறிவித்தார். எற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த ராஜினாமா கடி தத்தையும் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

விசாரணைக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் இஜாஸ் பட்டும் இதனை உறுதி செய்தார். 31 வயதான யூனிஸ்கானை சமாதானப் படுத்த இஜாஸ் பட் முயற்சித்த போது, மீண்டும் கப்டன் பதவியில் இருக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு காரில் சென்றுவிட்டார்.

முடிவை திரும்ப பெறும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகள் அவரை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப் படாவிட்டால், வருகிற 19 ம் திகதி நடைபெறும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாக குழு கூட்டத்தில் அது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று இஜாஸ் பட் தெரிவித்தார்.

நிலைக் குழுவும், யூனிஸ்கான் ராஜி னாமா விவகாரத்தில் மேலும் தலை யிட விரும்பவில்லை. இது பாகிஸ் தான் கிரிக்கெட் சபையின் உள்விவ காரம் என்று விளக்கம் அளித்துள்ளது.

பயிற்சியாளர் இன்திகாப் ஆலம் கூறும் போது, ‘யூனிஸ்கான் உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவு இது. சூதாட்ட குற்றச்சாட்டுகளை பரப்பியது இந்திய ஊடகங்கள் தான்.

விசாரணை யின் போது சூதாட்ட குற்றச்சாட்டு களை நாங்கள் நிராகரித்துவிட்டோம்’ என்றார். யூனிஸ்கான் தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் அப்ரிடி க்கு கப்டன் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதி ரான ஒரு நாள் தொடரில் பாகிஸ் தான் தோல்வி அடைந்தது. அதன் எதிரொலியாக பாகிஸ்தான் கப்டன் பொறுப்பில இருந்து சோயிப் மலிக் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக யூனிஸ் கான் கப்டன் பொறுப்பை பெற்றார்.

அவரது தலைமையில் கடந்த ஜூலை மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப் பையை பாகிஸ்தான் வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் அவரது விலகல் முடிவு கிரிக்கெட் சபை நிர்வாகிகள் மற்றும் சக வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ‘எனக்கு எதிராகவும், அணிக்கு எதிராகவும் கூறப்பட்ட சூதா ட்ட குற்றச்சாட்டுகளால் நான் வெறுப் படைந்துள்ளேன். இதனால் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்’ என்று யூனிஸ்கான் கூறினார்.

மேலும் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் தனக்கு ஓய்வு தேவை என்றும், இதனால் வருகிற நியூசிலாந்து மற் றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் தனது பெயரை அணித் தேர்வில் பரிசீலிக்க வேண்டாம் என்று யூனிஸ்கான் அந்த கடிதத்தில் கேட் டுக் கொண்டிருப்பதாக அவரது நெருங் கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

பாகிஸ்தான் அணியின் புதிய கப்ட னாக அப்ரிடி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •