வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


அம்பாறை மங்களகமவில் வைத்தியர் இன்றி மக்கள் அவதி

அம்பாறை மங்களகமவில் வைத்தியர் இன்றி மக்கள் அவதி

அம்பாறை மாவட்டத்திலுள்ள மங்களகம நடமாடும் வைத்தியசாலைக்கு கடந்த மூன்று மாத காலங்களாக வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் இப்பிரதேச மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் வாரத்திற்கு இரு தடவைகள் வைத்திய அதிகாரி ஒருவர் வந்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவ்வைத்தியர் திடீரென கண்டிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதனை தொடர்ந்து அவ்வைத்தியரின் இடத்திற்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.

இப் பிரதேச மக்கள் வைத்தியர் ஒருவர் இல்லாத காரணத்தினால் தெற்குப் புறமாக 24 கிலோ மீற்றர் தூருத்திலுள்ள கொணாகொல்லை வைத்தியசாலைக்கும் வடக்கு புறமாக 16 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மகா ஓயா வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டியுள்ளது.

மங்களகம பிரதேசத்தில் 490 குடும்பத்தில் 2250 பேர் வாழ்வதனால் ஒரு வைத்தியரை இதுவரை நியமிக்காதது குறித்து மக்கள் கடும் விஷனம் தெரிவிக்கின்றனர். (ஐ-ஞ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •