வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு அரங்கு வேலைகள் பூர்த்தி நிலையில்

வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டு அரங்கு வேலைகள் பூர்த்தி நிலையில்

களுத்துறை வெட்டுமகட பாகிஸ்தான் விளையாட்டரங்கின் புனரமைப்புப் பணிகள் தற்போது பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

களுத்துறை நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக் மேற்கொண்ட முயற்சியினால் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் 85 இலட்சம் ரூபா நிதி மூலம் இந்த விளையாட் டரங்கு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படுகிறது.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இந்த விளையாட்டரங்கினை புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டமை குறித்து இப்பகுதி விளையாட்டு வீரர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

களுத்துறை நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக்கின் வேண்டு கோளையடுத்து அப்போதைய உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் நிதி ஒதுக்கியமை இங்கு குறிப்பிடத் தக்கது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»