வரு. 78 இல. 167

ஹிஜ்ரி வருடம் 1431 ஷஃபான் பிறை 07
விகிர்தி வருடம் ஆனி மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JULY 19, 2010

ஓட்டமாவடி மத்திய கல்லூரி கூடுதல் பதக்கங்கள் பெற்று முதலிடம்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி கூடுதல் பதக்கங்கள் பெற்று முதலிடம்

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மட்/ஓட்டமாவடி மத்திய கல்லூரி கூடுதல் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மட்டக்களப்பு மத்தி வலயத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இதன்படி 15 வயது ஆண்கள் பிரிவில் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் எம். ஜே. ஆஸாத் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். 19 வயது ஆண் பிரிவில் 200 மீற்றர் நிகழ்ச்சியில் யு. எல். ஏ. ஸஹீர் முதலாமிடம் பெற்று தங்கம் வென்றதுடன், 15 வயது - 4 x 400மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் மத்திய கல்லூரி அணி முதலிடம் பெற்று மொத்தமாக 6 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

அத்தோடு 17 வயதுப் பிரிவில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்வில் டப்ளியூ. எம். சிபான் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் சுவீகரித்தார். 15 வயது 100 மீற்றரில் எம். ஜே. ஆஸாத், 17 வயது 200 மீற்றரில் டப்ளியூ. எம். சிபான், 19 வயது 100 மீற்றரில் யு. எல். ஏ. சஹீர் ஆகியோர் மூன்றாமிடங்களைப் பெற்று வெண்கலப் பதக்கங்களைச் சுவீகரித்ததுடன், 17 வயது ஆண் 4 x 100மீற்றர் அஞ்சலோட்டத்திலும் கல்லூரி அணி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தது. கல்லூரி 14 பதக்கங்களை பெற்று வலயத்தில் சாதனை படைத்துள்ளது.

இவ் வெற்றி தொடர்பான பாராட்டு விழாவும், வீதி ஊர்வலமும் அதிபர் எம். எல். ஜுனைட் தலைமையில் இடம்பெற்றது. பேண்ட் வாத்தியத்துடன் வெற்றி வீரர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விளையாட்டு ஆசிரியர்களான ஏ. சி. எம். பிர்னாஸ், ஏ. எம். நஜீப் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் யு. எல். ஏ. செயினுதீன் கலந்துகொண்டார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»